இந்த "மாடல்" மாநிலத்தில் தான் டாடா நிறுவனம் ரூ13 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப்போறாங்க! என்ன ஆலை வரப்போகுது
இந்தியாவில் டாட்டா குழுமம் ரூபாய் 13000 கோடி மதிப்பில் புதிய லித்தியம் அயான் பேட்டரி ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது. தனது வாகனங்களை முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் டாடா குழுமம் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால் தொடர்ந்து சிறப்பான விற்பனையை நிறுவனம் பெற்று வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து நல்ல கார்களை தயாரித்து வரும் டாட்டா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் கார்கள் பக்கம் திரும்பி உள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் விற்பனை ஆகும் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். மற்ற நிறுவனங்கள் துவங்கும் முன்பே டாடா நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து மார்க்கெட்டில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது.
டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்தாலும் அதற்கான பேட்டரி உள்ளிட்ட மற்ற உதிரிபாகங்களை எல்லாம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்துதான் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் பிரத்தியேகமாக லித்தியம் அயான் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது.

இதற்காக டாடா குழுமம் ரூபாய் 13000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக டாடா குழுமம் குஜராத் மாநிலத்தில் உள்ள சாணத் என்ற இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு தான் தனது பேட்டரி ஆலையை நிறுவ போகிறது. டாடா நிறுவனம் தனது அக்ரெட்டாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் என்ற துணை நிறுவனத்தின் பெயர்தான் இந்த ஆலையை துவங்குகிறது.
இந்த ஆலைக்கான உடன்படிக்கை குஜராத் மாநில அரசுடன் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டது. அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் டாடா நிறுவனம் தனது ஆலையை துவங்க வேண்டும் என குஜராத் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி விரைவில் இந்த ஆலையை கட்டமைக்கும் பணிகள் துவங்கவுள்ளது.
முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் 20 ஜிகா வாட்ஸ் ஹவர் பேட்டரி பவர் கொண்ட ஆலையை துவங்குகிறது. இதன் இரண்டாம் கட்டத்தில் இந்த திறன் இரட்டிப்பாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டப் பணிகள் எப்பொழுது முடிக்கப்படும் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் முதற்கட்ட பணிகள் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவிலேயே லித்தியம் அயான் கனிம வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் பேட்டரி ஆலைகளை திறக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே லித்தியம் அயான் பேட்டரிகளை தயாரிக்க முன்வந்துள்ளனர். அதில் டாடா நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இந்த ஆலையை மிகப்பெரிய அளவில் கட்ட அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் டாடா நிறுவனத்திற்கான பேட்டரிகள் மட்டுமில்லாமல் மற்ற வாகனங்களுக்கும் பேட்டரிகளையும் அதே நேரம் வெளிநாடுகளுக்கு பேட்டரிகளை ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பத்தையும் சேர்த்து கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








