12 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் நின்ற டாடா சுமோ.. ஸ்டார்ட் செய்ய முயன்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிசயம்!

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிய மிக சூப்பரான கார் மாடல்களில் ஒன்று சுமோ (Tata Sumo). 90ஸ்-களில் விற்பனையில் கொடி கட்டி பறந்த கார் மாடலாக சுமோ இருக்கின்றது. இந்த காரே முதன் முதலில் டாடா மோட்டார்ஸ் 1994ஆம் ஆண்டிலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகனமாகவும் அது மாறியது. இதன் விளைவாக நாட்டின் மூலைமுடுக்கெங்கும் இந்த காரின் கால் தடம் பரவத் தொடங்கியது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் மற்றும் அரசு துறையினரின் பயன்பாட்டிலும் இந்த கார் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது.

12 Year old tata sumo

இப்போதும், ஈபி மற்றும் காவல்துறையில் இந்த கார் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இத்தகைய ஓர் வாகனத்தையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதுமுக வாகனங்களின் வருகையினால் ஏற்பட்ட போட்டியின் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றியது.

ஆகையால், ஒரு காலத்தில் சாலையில் அதீத எண்ணிக்கையில் காட்சியளித்த சுமோ தற்போது கண்களில் படுவே அரிதினும் அரிதாக மாறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே பயன்படுத்தி சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிய சுமோவைக் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றனர்.

12 Year old tata sumo back side view

துருவிற்கு இரையாகிக் கொண்டிருந்த அந்த கார் ஸ்டார்ட் ஆகியதா?, இளைஞர்களின் முயற்சி வெற்றி அடைந்ததா?, இல்லையா?, என்பது பற்றிய சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமோ காரை உயிர்ப்பிக்குமே முயற்சியே கேரளத்தைச் சேர்ந் இளைஞர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களையும் வீடியோவாக பதிவிட்டு அந்த வீடியோவை யாத்ரா யுட்யூப் சேனலில் பதிவிட்டிருக்கின்றனர். வீடியோவில் ஆரம்பத்தில் காரை பார்க்கும்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இது ஸ்டார்ட் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்கும் அளவிற்கே அந்த கார் மிக மோசமான நிலையில் இருந்தது.

இருப்பினும், அதை ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் இளைஞர்கள் களமிறங்கினர். அதில் தற்போது அவர்கள் வெற்றியும் கண்டிருக்கின்றனர். ஆமாங்க, காரை பலகட்ட முயற்சிகளுக்கு பின்னால் அவர்கள் வெற்றிகரமாக ஸ்டார்ட் செய்துவிட்டனர். அதற்கு முன்னதாக அவர்கள் பலகட்ட வேலைகளை செய்தனர். ஆனால், பெரியளவில் எந்த பொருளையும் அவர்கள் மாற்றவில்லை. பேட்டரி மட்டுமே மாற்றப்பட்டது.

காரில் இருந்த பழைய பேட்டரியின் ஆயுள் முடிவடைந்துவிட்ட காரணத்தினாலேயே அவர்கள் பேட்டரியை மாற்ற நேரிட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து, ரேடியேட்டரிலும் நீர் நிரப்பட்டது. மேலும், அதில் இருந்த ஆயிலும் செக் செய்யப்பட்டது. போதுமான அளவு ஆயில் இருந்த காரணத்தினால் எஞ்ஜின் ஆயில் நிரப்பப்படவில்லை.

12 Year old tata sumo engine

இதை அடுத்து வாகனத்தில் இருந்த பழைய டீசல் வெளியேற்றப்பட்டு, புதிதாக வாங்கி வரப்பட்ட டீசல் நேரடியாக கேனில் இருந்து வாகனத்திற்குள் உட்செலுத்தப்பட்டது. இதுபோன்ற பன்முக செயல்களுக்கு பின்னரே சுமோவை ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் இளைஞர்கள் களமிறங்கினர். ஆனால், அது ஸ்டார்ட் ஆகவே இல்லை.

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர், குறிப்பாக, எரிபொருள் செல்லும் குழாய்களில் இருந்து அடைப்புகள் எல்லாம் அகற்றப்பட்ட பின்னர் அந் கார் ஸ்டார்ட் ஆகியது. ஸ்டார்ட் ஆனதைப் போலவே அது நல்ல இயக்கநிலையிலும் இருந்தது. முழுக்க முழுக்க துரைவிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அந்த கார் இயங்கியது அனைவரையும் மூழ்க செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல சுமோவின் வீடியோவை பார்த்த ஒட்டுமொத்த பார்வையாளர்களும் அது இயங்கியதைப் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இதற்கு அந்த கார் இருந்த நிலை மட்டுமல்ல, அந்த கார் மிக மிக பழைய என்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இதுமாதிரியான திறன்களை டாடா கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதன் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு அதிகரித்தக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 15, 2023, 11:49 [IST]
English summary
Tata sumo muv starts after 12 years video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X