ஒரே மோதலில் மாருதி மினி டிரக்கை கொடி கம்பம்போல நிற்க வைத்த டாடா கார்.. குட்டி கார் டியாகோ பார்த்த வேலையா இது!
டாடா மோட்டார்ஸின் மிக மிக விலை குறைவான கார் மாடலாக டியாகோ இருக்கின்றது. இந்த காரை வைத்திருக்கும் அனைவரும் பெருமைக் கொள்ளக் கூடிய ஓர் சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. மிகக் கடுமையான விபத்தை அந்த கார் சந்தித்து இருக்கின்றது. இந்த நிகழ்வே அக்கார் உரிமையாளர்களை பெருமைக் கொள்ளும் நிகழ்வாக அமைந்திருக்கின்றது.
என்னங்க, விபத்து ஏற்பட்டுச்சுனா கஷ்டம்தான் படுவாங்க. ஆனா வேற ஏதோ பேசிட்டு இருக்கீங்கனு கேக்குறீங்களா. டாடா டியாகோ அதை விட உருவத்தில் பலமடங்கு பெரிய தோற்றம் கொண்ட ஓர் வாகனத்துடனேயே மோதலைச் சந்தித்து இருக்கின்றது. மிகக் கடுமையான விபத்தைச் சந்தித்த போதிலும் அந்த காரில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருந்திருக்கின்றனர்.

இதுவே அனைத்து டியாகோ கார் பயன்பாட்டாளர்களும் பெருமையடையக் காரணமாக அமைந்திருக்கின்றது. கர்நாடகா மாநிலம் தாவணகெரே எனும் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மாருதி சுஸுகி கேரி பிக்-அப் டிரக் (Maruti Suzuki Carry pick up truck) உடனேயே அந்த கார் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
விபத்துக்குள்ளானதில் மாருதி சுஸுகியின் அந்த மினி டிரக் கொடி கம்பம் போல நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இதேபோல், டாடா டியாகோ காரின் முகப்பு பகுதியும் மிகக் கடுமையான சேதத்திற்கு ஆளாகி இருக்கின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்திற்கான துள்ளியமான காரணங்கள் தெரியவில்லை. விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதன் அடிப்படையில், டாடா டியாகோவே கட்டுப்பாட்டை இழந்து வந்து சூப்பர் கேரி மீது மோதியது தெரிய வந்திருக்கின்றது. அதிக வேகத்தில் வந்து மோதியதன் காரணத்தினாலேயே சூப்பர் கேரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
ஒருவேளை டியாகோ மிதமான வேகத்தில் வந்திருந்தால் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதேநேரத்தில், விபத்தையும் தவிர்த்திருக்க முடியும். எனவேதான் அதிக வேகம் கூடாது என கூறப்படுகின்றது. விபத்தைச் சந்தித்த டியாகோ காரின் உரிமையாளர், தன்னுடைய டியாகோவை ஆஹோ, ஒஹோவென புகழ தொடங்கி இருக்கின்றார்.
குறிப்பாக, காரின் கட்டமைப்பையே அவர் அதிகம் பாராட்டி இருக்கின்றார். தன்னுடைய கார் மினி டிரக் மீது மோதிய பின்னர் அந்த டிரக்கின் பின் பகுதி முழுமையாக டியாகோ மீது சாய்ந்திருந்தது. இத்தகைய பெரும் எடைக் கொண்ட ஓர் வாகனம் சாய்ந்திருந்தபோதிலும் அதன் மேற்கூரை உறுதியாக இருந்தது.
இதனைக் கண்டே அவர் ஆச்சரியமடைந்து டியாகோவை பாராட்டி இருக்கின்றார். முகப்பு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் உடற்கூடு மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றது. இதனாலேயே இந்த விபத்து பலரை ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. டாடா டியாகோ இவி எனும் பெயரில் இந்தியாவில் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பெட்ரோலைப் போலவே அதுவும் சற்று மலிவு விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. பெட்ரோல் டியாகோ ரூ. 5.6 லட்சம் தொடக்க விலையிலும், டியாகோ இவி ரூ. 8.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுதவிர சிஎன்ஜி தேர்விலும் டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இரண்டிலும் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சிஎன்ஜி வெர்ஷனில் சிஎன்ஜியால் இயங்குகின்ற வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டு இருக்கும். மற்றுமொரு சிறப்பு விஷயம் என்ன என்றால் டாடா டியாகோ ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் என்பதாகும்.
குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த கார் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று இருக்கின்றது. கர்நாடகாவில் அரங்கேறி இருக்கும் இந்த விபத்தோ இந்த காருக்கு தாராளமாக ஐந்து ஸ்டார்களையே வழங்கி இருக்கலாம் என கூறும் அளவிற்கு அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவையாக இருக்கின்றன. சமீபத்தில் இதேபோல் மிகக் கடுமையான விபத்தைச் சந்தித்த போதிலும் டாடா ஹாரியர் அதன் பயணிகளைப் பத்திரமாக பாதுகாத்தது. இதேபோல், நெக்ஸான் மற்றும் டிகோர் உள்ளிட்ட டாடா தயாரிப்புகளும் விபத்தின்போது அதன் பயணிகளைப் பாதுகாத்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








