டாடா கார்கள் உசுர கொடுத்து காப்பாத்தும்.. இதோ அதற்கான சான்று.. வீடியோவை பார்த்து மிரளும் மக்கள்!

டாடா கார்கள் உசுர கொடுத்து காப்பாற்றும் என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவம் அரங்கேறி இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் புதிய சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. டாடாவின் மலிவு விலை கார் மாடலான டியாகோவைச் சார்ந்து அரங்கேறி இருக்கும் சம்பவம் பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கும் மிக மிக விலை குறைவான கார் மாடலாக டியாகோ இருக்கின்றது. இந்த காரே உசுர கொடுத்து தன்னுள் பயணித்த பயணிகளை விபத்தின்போது காப்பாற்றி இருக்கின்றது. ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில் டாடா டியாகோ மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து இருக்கின்றது.

Tata tiago crashed

இந்த நிலையை எட்டியிருக்கின்ற போதிலும் தன்னுள் பயணித்த பயணிகளுக்கு அபரீதமான பாதுகாப்பை வழங்கி அது அரணாக அமைந்திருக்கின்றது. விபத்து நேர்வதற்கு அதீத வேகமே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. சாலையைப் பிரிக்கும் டிவைடரில் மோதியே அது விபத்தைச் சந்தித்து உள்ளது. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்ததன் காரணத்தினாலேயே அது டிவைடர்மீது மோதி இருக்கின்றது.

இந்த மாதிரியான காரணத்திற்காகவே வாகனத்தில் மிதமிஞ்சிய வேகத்தில் பயணிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும் ஒரு சிலர் அதிக வேகத்தில் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே டாடா டியாகோ கார் விபத்து சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது.

குண்ட்லி-மனேசர்-பல்வல் அதிவிரைவு சாலையிலேயே இந்த விபத்து நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. வாகனங்கள் மிதமிஞ்சிய வேகத்தில் செல்ல அனுமதிக்கும் ஓர் சாலையே இதுவாகும். இத்தகைய ஓர் சாலையிலேயே டாடா டியாகோ அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்கும் என கருதப்படுகின்றது.

Tata tiago

பொதுவாகவே விரைவு சாலைகள் வாகனங்களை அதிக வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கின்றன. குறிப்பிட்ட அளவு வேகம் கட்டாயம். அதைவிட குறைவான வேகத்தில் ஓர் வாகனம் செல்லும் எனில் அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், டூ-வீலர் மற்றும் ஆட்டோ போன்ற மெதுவாக ஓடும் வாகனங்களுக்கு அந்த சாலையில் ஓட அனுமதி இல்லை.

இத்தகைய ஓர் சாலையில் டியாகோ விபத்தைச் சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டி அதை டிவைடரில் அவர் மோதி இருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. இந்த விபத்தில் காரின் வலது பக்கம் மிக மோசமாக சிதைந்திருக்கின்றது. மேலும், அதன் வலது பக்க ஆக்ஸில் சம்பவம் நடைபெற்ற உடனேயே சுக்கு-நூறாக உடைந்திருக்கின்றது.

Tata tiago ev

இதுதவிர குறைந்தபட்சம் கார் 8 முறையாவது சாலையில் உருண்டிருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இத்தகைய மோசமான விபத்தைச் சந்தித்த போதிலும் அக்காரில் பயணித்த ஜோடிகள் பத்திரமாக வெளியேறினர். குறிப்பாக, டிரைவர் பக்கம் மிக மோசமாக பாதிப்பைச் சந்தித்தபோதிலும், அதை ஓட்டி வந்தவர் சிறு சிறு காயங்களுடன் காக்கப்பட்டு இருக்கின்றார்.

இதற்கு காரில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததே முக்கிய காரணமாக உள்ளது. இதனால்தான் இந்தியாவில் காரில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் அறிவுறுத்தப்படுகின்றது. சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை மற்றும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராக டியாகோ இருக்கின்றது. இந்த கார் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டியாகோ ரூ. 5.60 லட்சம் ஆரம்ப விலையிலும், டியாகோ இவி ரூ. 8.69 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும். இந்த கார் ஓர் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 11:53 [IST]
English summary
Tata tiago crashed and rolled over at least 8 times
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X