டாடா களமிறக்கிய புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! அதுனாலதான் எல்லாரையும் திரும்பி பாக்க வெச்சிருக்கு!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் கார், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள், நடப்பு 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு, இன்னும் 4 மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள்ளாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, டியாகோ இவி எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை மிக வேகமாக கடந்த எலெக்ட்ரிக் கார் என்ற சாதனையை டாடா டியாகோ இவி படைத்துள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பாக வேறு எந்தவொரு எலெக்ட்ரிக் காரும், இவ்வளவு குறுகிய காலத்தில், 10 ஆயிரம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்தது கிடையாது. டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் இதற்கு முன்பாக இன்னும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
முன்பதிவு (Bookings) தொடங்கப்பட்ட சமயத்தில், டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார், வெறும் 24 மணி நேரத்தில், 10 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று விட்டது. இதன் மூலம் இந்தியாவில் மிகவும் வேகமாக 10 ஆயிரம் முன்பதிவுகளை வாரி குவித்த எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ இவி தன்வசம் வைத்துள்ளது.

அந்த சாதனையே இன்னும் முறியடிக்கப்படாத நிலையில், அதற்குள்ளாக வேறு ஒரு சாதனையை டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் நிகழ்த்தி விட்டது. வரும் காலங்களில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதன் விலை (Price) மிகவும் குறைவாகும்.
தற்போதைய நிலையில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 11.99 லட்ச ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா டியாகோ இவி திகழ்கிறது.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 24 kWh மற்றும் 19.2 kWh பேட்டரிகள் ஆகும். இவற்றின் ரேஞ்ச் முறையே 315 கிலோ மீட்டர்கள் மற்றும் 250 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில், முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 45க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளை வழங்க கூடிய இஸட் கனெக்ட் செயலி என ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் இடையே மிக கடுமையான போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








