Tata Tiago EVயை சொட்டையாக்கிய ருதுராஜ் விளாசிய பந்து... என்னா ஃபோர்ஸு... நல்லவேள யாரு மண்டைலையும் படல!

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ருதுராஜ் கெய்க்வாட் விலாசிய பந்து, விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா டியாகோ இவி காரை பதம் பார்த்திருக்கின்றது. ஸ்பான்சருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காருக்கு நேர்ந்த சோகமான சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்களின் பிரியமான போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் ஆட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. இந்த ஆண்டிற்கான போட்டிகளில் பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் டீமுக்கும் இடையில் 6வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ruturaj gaikwad massive six

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக துவக்க ஆட்ட நாயகனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். இந்த போட்டியின்போது அவர் வழக்கம்போல் சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவ்வாறு அவர் விளாசிய ஓர் பந்து ஸ்டேடியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா டியாகோ இவி காரை பதம் பார்த்திருக்கின்றது. அது சிக்ஸர் ஆகும்.

டாடா நிறுவனம் சார்பில் ஸ்பான்சருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டியாகோ இவி காரையே அந்த பந்து வேகமாக மோதியிருக்கின்றது. இதனால், அந்த காரில் சொட்டையே விழுந்துவிட்டது. இந்தியாவின் மிகவும் பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் டாடா டியாகோ இவி-யும் ஒன்று. இந்த காரையே ருதுராஜ் கெய்க்வாட் விளாசிய பந்து மைதானத்தின் பவுண்டரியைத் தாண்டி சென்று பதம் பார்த்திருக்கின்றது.

tata tiago ev dent

இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. இந்த கார் வெறும் ஸ்பான்சருக்காக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் மட்டுமல்ல, இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு பரிசாக வழங்கப்பட வேண்டிய காரும் அதுவாகும். இதையே ருதுராஜ் கெய்க்வாட்டின் பந்து சேதப்படுத்தி இருக்கின்றது.

ருதுராஜ் கெய்க்வாட் விளாசிய பந்து, வலது கை பந்து வீச்சாளர் கே. கௌதம் வீசியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த போட்டியில் அதிக ரன்களையும், ரேட்டிங்கையும் குவிக்கும் விளையாட்டு வீரருக்கு இன்னும் பல பரிசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. டாடா டியாகோ இவி காருடன் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட இருக்கின்றன.

இதை ருதுராஜ் கெய்க்வாட் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சாதகமான சூழலே தற்போது வரை நிலவுகின்றது. சுவாரஷ்யமாக டாடா மோட்டார்ஸ் தன்னுடைய ஸ்பான்சர் கார் மீது விழும் ஒவ்வொரு பந்துக்கும் ஓர் மரக் கன்றை நட இருப்பதாகவும், கர்நாடகா காபி தோட்டத்தில் பல்லுயிர் பெருக்கத்திற்காக ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கின்றது.

ருதுராஜின் இந்த சிக்ஸரால் டாடா மோட்டார்ஸ் அதன் வாக்குறுதியை நிறைவேற்ற இருக்கின்றது. இதனால் கிடைக்க இருக்கும் புகழ்கள் டாடா மற்றும் ருதுராஜ் இருவரையும் வந்து சேரும். இந்தியாவின் மிக மிக விலைக் குறைவான எலெக்ட்ரிக் காரே டியாகோ இவி. இந்த கார் இப்போதைய நிலவரப்படி ரூ. 8.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் உயர்நிலை வேரியண்டிற்கு ரூ. 11.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த மின்சார கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, எக்ஸ்இ (XE), எக்ஸ்டி (XT), எக்ஸ்இசட் பிளஸ் (XZ+), எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் (XZ+ Tech LUX) ஆகும்.

மேலும், இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கபடுகின்றன. 19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வுகளிலேயே டியாகோ இவி கிடைக்கிறது. இதில், 19.2 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜையும், 24 kWh பேட்டரி பேக் முழு சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

டியாகோ இவியில் 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒற்றை மின் மோட்டார் தேர்வில் மட்டுமே டியாகோ இவி விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் 5.7 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரு விதமான ரைடிங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இத்துடன் சிறப்பு அம்சங்களாக, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எட்டு ஸ்பீக்கர்கள் அடங்கிய ஹர்மன் ஆடியோ சிஸ்டம், ஆட்டோ ஹெட்லேம்ப், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கூடுதல் சிறப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களாக, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புரெஜெக்டர் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் மற்றும் டெசன்ட் அசிஸ்ட், டிஆர்எல்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் டியாகோ இவி-யில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகளும் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரையே இந்த ஐபிஎல் போட்டியில் ஸ்பான்சராக நிலை நிறுத்தி இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். இதனை சிறந்த ஆட்ட நாயகனுக்கு பரிசாக வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கின்றது. இந்த காருக்கு போட்டி அளிக்கும் விதமாக எம்ஜி நிறுவனம் அதன் கோமெட் எனும் சிறிய தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த மாதம் 19ம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 11:49 [IST]
English summary
Tata tiago ev dented by ruturaj gaikwad here is how
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+