டாடா டியாகோ இவி விற்பனையில் வெற்றி நடைபோட பெண்கள் காரணமா?.. இத டாடாவே எதிர்பார்த்திருக்காது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக டியாகோ இவி (Tiago EV) இருக்கின்றது. இருப்பதிலேயே நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான மின்சார கார் இதுவாகும். இந்த காரை பெருநகரங்களை மையப்படுத்தியே டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

ஆனால், அதற்கு வளர்ந்து வரும் சிட்டி மற்றும் சின்ன சின்ன நகரங்களிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வரவேற்பினால் நிறுவனத்தின் கேம் சேஞ்ஜர் கார் மடாலாக டாடா டியாகோ இவி உருவெடுத்திருக்கின்றது. 50 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை இந்த பகுதிகளில் இருந்தே கிடைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Tata tiago ev getting more female customers

இதன் விளைவாக விற்பனைக்கு வந்த குறைவான மாதங்களிலேயே 15 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை வளர்ச்சியை அதனால் எட்ட முடிந்திருக்கின்றது. கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே டியாகோ இவி விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் முக்கிய நகரங்களிலேயே டியாகோ இவி அதிகம் விற்பனையாகும் என எண்ணியது.

ஆனால், இந்தியாவின் டாப் 10 நகரங்களில் கிடைத்த விற்பனையே வெறும் 35 சதவீதம் மட்டுமே ஆகும். இரண்டாம் கட்ட நகரங்களில் 16 சதவீதம் விற்பனையைப் பெற்றிருக்கின்றது. மீதமுள்ள 49 சதவீதமும் சிறிய டவுன் மற்றும் அதை சார்ந்திருக்கும் சிட்டிகளில் கிடைத்தவை ஆகும். இது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.

Tata tiago ev getting more female

குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு அதிகரித்துக் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இவர்களினாலேயே இந்த கார் வெற்றிகரமான மின்சார காராக உருவெடுக்க முடிந்திருக்கின்றது. துள்ளியமான எண் விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாடா டியாகோ இவி-யை அதிகளவில் பெண்களே வாங்கிக் கொண்டிருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரின் எளிமையான தோற்றம் மற்றும் சுலபமான கையாளும் வசதி உள்ளிட்டவையே இதை பெண்கள் அதிகம் விரும்பி காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல காரணங்கள் இந்த காரை இந்தியர்கள் அதிகம் வாங்க காரணமாக உள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் காரை வீடுகளிலேயே வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பதும், நகரங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் சார்ஜிங் கட்டமைப்புகளும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை மக்கள் அதிகம் வாங்க காரணமாக இருக்கின்றது.

Tata tiago ev front beauty

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி டாடா டியாகோ இவி-க்கு எதிர்பார்த்திராத நகரங்களில் இருந்தெல்லாம் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், பிளஸ்பூர், சதாரா, ஷிமோகா மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் அதிகளவில் மக்கள் டியாகோ இவி-யை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இங்கு இந்தியாவின் டாப் செல்லிங் கார் மாடலான நெக்ஸான் இவியைக் காட்டிலும் டியாகோ இவியை வாங்குபவர்களே அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் இந்த காரில் ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருக்கின்றது. மேலும், இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் 24 kWh பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது எம்ஐடிசி சான்றின்படியான ரேஞ்ஜ் விபரம் ஆகும்.

அதேவேளையில் நிஜ உலகில் இந்த காரை பயன்படுத்தும்போது 260 கிமீ ரேஞ்ஜை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். இந்த கார் மாடலில் சிறிய பேட்டரி பேக் தேர்வான 19.2 kWh ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ முதல் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ரேஞ்ஜ் திறனைப் போலவே தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், டெலிமேட்டிக்ஸ் உடன் கூடிய இசட் கன்னெக்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட வசதிகளும் டியாகோ இவி-யில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டியாகோ இவி ஆரம்ப விலை ரூ. 8.69 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் காருத்து: இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டாடா டியாகோ இவி விற்பனைக்குக் களமிறக்கியபோதே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் தற்போது இந்திய மின்சார கார் உலகில் விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும், எதிர்பார்க்காத நகரங்களில் இருந்தும் அது வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 17, 2023, 9:02 [IST]
English summary
Tata tiago ev electric car is getting more female customers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X