டாடா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்... மக்களுக்காக கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்து விட்டன. இந்தியாவில் ஒரு எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. உண்மையில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். மிகவும் குறைவான விலைதான் (Price) டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழ்கிறது.

டாடா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்... மக்களுக்காக கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்!

நம்பவே முடியாத குறைவான விலை!

பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 11.79 லட்ச ரூபாய் மட்டும்தான். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இது அறிமுக சலுகை விலை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முன்பதிவு செய்யும் 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

நல்ல சான்ஸ் மிஸ் ஆயிருச்சே!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த 20 ஆயிரம் முன்பதிவுகளும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலையை தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. கொஞ்சம் யோசித்து விட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என நினைத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு (Price Hike) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி அவர்கள் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாங்குவதாக இருந்தால் கூடுதல் தொகையை செலவழிக்க வேண்டும். மேலும் 10 ஆயிரம் பேருக்கு சலுகை விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்... மக்களுக்காக கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்!

எவ்ளோ அதிகம் ஆயிருக்கு?

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது சீராக 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை இனி 8.69 லட்ச ரூபாயாக இருக்கும் (முன்பு 8.49 லட்ச ரூபாய்). அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை இனி 11.99 லட்ச ரூபாயாக இருக்கும் (முன்பு 11.79 லட்ச ரூபாய்).

டாடா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்... மக்களுக்காக கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்!

ரேஞ்ச் எவ்ளோங்க?

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில், 19.2 kWh மற்றும் 24 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் ரேஞ்ச் (Range) முறையே 250 கிலோ மீட்டர்கள் மற்றும் 315 கிலோ மீட்டர்கள் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும். இதுதான் ரேஞ்ச் எனப்படுகிறது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விலை குறைவானதாக இருந்தாலும் கூட ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டாடா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்... மக்களுக்காக கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்!

இதெல்லாம் முக்கியமான வசதிகள்!

இதில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய ஓஆர்விஎம்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வசதிகளுக்கு பஞ்சமில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

அந்த செய்தி சீக்கிரமே வரப்போகுது!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் உருவெடுத்தது என்ற செய்தி கூடிய விரைவிலேயே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே உற்சாகத்துடன் வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 10, 2023, 18:50 [IST]
English summary
Tata tiago ev price hike india all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X