சிஎன்ஜி கார் விற்பனையில் கெத்து காட்டும் டாடா! இந்த அளவுக்கு சேல்ஸ் ஆகுதா! நம்பவே முடியலயேப்பா!

இந்தியாவில் சிஎன்ஜி (CNG) கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும், கடந்த 2022ம் ஆண்டின் தொடக்கத்தில், சிஎன்ஜி சந்தையில் காலடி எடுத்து வைத்தது. அந்த சமயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கியது, டியாகோ (Tiago) மற்றும் டிகோர் (Tigor) கார்களின் சிஎன்ஜி மாடல்கள் ஆகும்.

இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டிலேயே டியாகோ என்ஆர்ஜி (Tiago NRG) காரின் சிஎன்ஜி மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கியது. இந்த சூழலில், டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் கார்களின் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 40 சதவீதம், சிஎன்ஜி மாடல்களில் இருந்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tata Tigor iCNG

டாடா டியாகோ சிஎன்ஜி, டாடா டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி என அனைத்து மாடல்களிலும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை வழங்கும்.

இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் தனது அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி (Altroz CNG) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Tata Tiago iCNG

இந்த புதிய மாடலில், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் காரின் சிஎன்ஜி மாடலை (Punch CNG) இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதிலும் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய கார்களில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களிலும் (Electric Cars) தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதலிடத்தில் இருப்பதே டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் அமைக்கவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்பந்தம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் மிக வேகமாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் கூட அதை நோக்கிதான் இருக்கின்றன. எனவேதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கவனத்தை சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களை நோக்கி திருப்பியுள்ளது. மற்ற நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல!

More from DriveSpark

Article Published On: Friday, May 26, 2023, 23:44 [IST]
English summary
Tata tiago tigor 40 per cent sales comes from cng variants all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+