காசை குடுத்த உடனேலாம் தர மாட்டாங்க! டாடாவோட இந்த காரை வாங்கணும்னா இப்படி ஒரு தகுதி இருக்கணுமா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 5.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.11 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டாடா டியாகோ கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை XE, XM, XT(O), XT மற்றும் XZ+ ஆகியவை ஆகும். அதேபோல் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. அவை ஃப்ளேம் ரெட், ஓபல் ஒயிட், மிட்-நைட் ப்ளம், டேடோனா க்ரே மற்றும் அரிசோனா ப்ளூ ஆகியவை ஆகும்.

டாடா டியாகோ காரானது, பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் சுமார் 4 வாரங்களாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 9 வாரங்களாக இருக்கிறது.
அதாவது டாடா டியாகோ காரின் பெட்ரோல் வேரியண்ட்களை நீங்கள் இன்று முன்பதிவு செய்தால், 4 வாரங்களுக்கு பிறகுதான் டெலிவரி செய்யப்படும். அதே நேரத்தில் டாடா டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களை முன்பதிவு செய்தால், நீங்கள் டெலிவரி பெறுவதற்கு 9 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

டாடா டியாகோ காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் டாடா டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய 2 ஆப்ஷன்களும் டாடா டியாகோ காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா டியாகோ இவி (Tata Tiago EV) திகழ்கிறது.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 12.04 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா டியாகோ இவி போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ காரை வாங்க வேண்டுமென்றால், அதற்கு வேரியண்ட்களை பொறுத்து, குறிப்பிட்ட காலம் வரை பொறுமையாக காத்திருக்கும் தகுதி வேண்டும். அப்போதுதான் இந்த கார் டெலிவரி கிடைக்கும். இது மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பதால், பலரும் காத்திருந்துதான் டெலிவரி பெற்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








