இனிமேல் கிடைக்காது! பிரபலமான டாடா கார் மாடலின் விற்பனை திடீரென நிறுத்தம்! சொல்லாம கொள்ளாம இப்டி பண்ணீட்டாங்களே
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து கார்களில் ஒன்று டாடா டிகோர் (Tata Tigor). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஒவ்வொரு மாதமும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு ஓரளவு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டிகோர் ஈட்டி தந்து கொண்டுள்ளது.
எனவே பிஎஸ்-6 இரண்டாவது கட்ட (BS6 Phase-II) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப டிகோர் காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்தது. ஆர்டிஇ எனப்படும் ரியல் டிரைவிங் எமிஷன்ஸ் (RDE - Real Driving Emissions) விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இன்ஜின் அப்டேட் செய்யப்பட்டிருப்பதுடன், மற்றொரு முக்கியமான மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் டிகோர் காரின் கலர் ஆப்ஷன்களில் கை வைத்துள்ளது. இதன்படி டாடா டிகோர் காரின் ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன் (Dual-tone Colour Options) கொண்ட மாடல்களின் விற்பனை தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, இனி டிகோர் காரானது, மொத்தம் 4 சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்களில் (Single-tone Colour Options) மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அவை மேக்னடிக் ரெட், அரிசோனா ப்ளூ, ஓபெல் ஒயிட் மற்றும் டேடோனா க்ரே ஆகியவை ஆகும்.

2023 டாடா டிகோர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா டிகோர் காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சிஎன்ஜி வெர்ஷனிலும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.
பெட்ரோல், சிஎன்ஜி மாடல்கள் தவிர டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா டிகோர் இவி (Tata Tigor EV) என்ற பெயரில் இந்த மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாகும். வரும் காலங்களில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) என நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








