மின்சார கார்களை நம்பி மிக பெரிய ரிஸ்க் எடுக்கும் டாடா மோட்டார்ஸ்... யாருமே எதிர்பார்க்காத ஒன்னு!
ஐசிஇ (பெட்ரோல், டீசல்) எஞ்ஜின் கொண்ட கார்கள் விற்பனையில் வேண்டுமானாலும் நம்ம டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரும் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் இதுவே இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமாக இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் நெக்ஸான்.இவி (Nexon.ev)-க்கு வேற லெவல் வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே சமீபத்தில் இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் களமிறக்கியது. வேற லெவல் கவர்ச்சியான தோற்றம் மற்றும் அம்சங்கள் கொண்ட காராக இதனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் கார்களுக்காக மிகப் பெரிய ரிஸ்க்கை நம்ம டாடா மோட்டார்ஸ் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் பெட்ரோல், டீசல் கார்கள் விஷயத்தில் செலுத்திக் கொண்டிருப்பதை போலவே எலெக்ட்ரிக் கார்கள் அதீத கவனத்தைச் செலுத்த திட்டமிட்டு இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் வாகனங்களை விற்பனைச் செய்வதற்கு என மிகப் பெரிய நெட்வொர்க் சாம்ராஜ்யத்தையே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் உருவாக்கி இருக்கின்றது. இதன் விற்பனை வலை அமைப்பு சின்ன சின்ன கிராமங்களில்கூட பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. அதாவது, டாடாவின் விற்பனையகத்தை சில குக் கிராமங்களில்கூட காண முடியும்.

இந்த மாதிரியான சூழலிலேயே ஐசிஇ வாகனங்களுக்கு உருவாக்கப்பட்டிருப்பதைப் போலவே மிகப் பெரிய நெட்வொர்க்கை எலெக்ட்ரிக் கார்களுக்காக உருவாக்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மின்சார கார்களுக்கு என தனி ஷோரூம்களை நிறுவவே டாடா மோட்டார்ஸ் பிளான் போட்டு இருக்கின்றது.
நிறுவனம் சமீபத்திலேயே .இவி எனும் பிராண்டை அறிமுகப்படுத்தியது. இது மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பிராண்ட் ஆகும். இதனைத் தொடர்ந்து மின்சார வாகனங்களுக்காக பிரத்யேக ஷோரூமை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டாடா .இவி எனும் பிராண்ட் பெயரிலேயே நிறுவனம் தனது புதிய ஷோரூம்களை நிறுவனம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமில்லைங்க, டாடா மோட்டார்ஸ் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை உலக நாடுகள் சிலவற்றிற்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு கட்டாயம் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்றதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆமாங்க, சர்வதேச சந்தைக்கு ஏற்றதாகவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன.
இதனால்தான் இந்தியாவிலும் டாடா மோட்டார்ஸின் அனைத்தும் எலெக்ட்ரிக் கார்களுக்கும் மிக மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, நெக்ஸான்.இவிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான்.இவி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
இதற்கு அக்காரை கர்வ் கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களைப் பயன்படுத்தி அப்டேட் செய்திருப்பதே காரணமாக இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இப்போதைய நிலவரப்படி நெக்ஸான்.இவி, டியாகோ இவி மற்றும் டிகோர் இவி என மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவற்றின் எண்ணிக்கையை அடுத்து நான்கு ஆண்டுகளில் 10 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க, டாடா மோட்டார்ஸ் நடப்பு நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்ய அது திட்டமிட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அந்நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு என தனி ஷோரூம்களை திறக்கும் பிளானைப் போட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் இந்தியாவின் சாலைகள் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களே ஆளுகை செய்யும் என வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். இத்தகைய எதிர்காலத்தை நோக்கியே பயணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களுக்கு என தனி ஷோரூமை நிறுவுவதற்கான பிளானை போட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








