இந்தியாவையே கலக்கப்போகும் காருக்கு புதிய பெயரைவைத்த டாடா? இப்படி ஒரு முடிவை எடுப்பாங்கனு யாருமே நினைக்கல!

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபிரெஸ்ட் என தனது புதிய காருக்கான டிரேடு மார்க்கை பதிவு செய்துள்ளது. இந்தப் பெயரை டாடா நிறுவனம் தனது கர்வ் எலக்ட்ரிக் காருக்கு புரோடெக்க்ஷன் வெர்ஷன் பெயராக வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்வ் என்ற கான்செப்ட் காரை இவி காராக அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே இந்த கார் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கர்வ் காரின் இன்டர்னல் கம்பேஷன் இன்ஜின் வெர்ஷன் கான்செப்ட் காராக அறிமுகப்படுத்தப்பட்டது.

tata frest trademark

இதற்கிடையில் டாடா நிறுவனம் தனது புதிய நெக்ஸான் காரை தற்போது டெஸ்ட் செய்து வருகிறது. புதிய நெக்ஸான் கார் ஆங்காங்கே டெஸ்ட் செய்யப்படும்போது கேமராவின் கண்களுக்கு சிக்கி சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த புதிய நெக்ஸான் காரை அடிப்படையாகக் கொண்டுதான் கர்வ் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் கர்வ் காரைப் பொறுத்தவரை கான்செப்ட் வெர்ஷனில் கூப்பே அமைப்பிலான ரூஃப் லைனை கொண்டு வடிவமைத்துள்ளது. இதே வடிவமைப்பு தான் புரோடெக்க்ஷன் காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்பக்கத்தை பொருத்தவரை புதிய நெக்ஸான் மற்றும் கர்வ் ஒரே மாதிரியான டிசைனை கொண்டுள்ளது.

tata frest trademark

புதிய நெக்ஸான் காரின் உட்புறமும் டாடா கர்வ் கான்செப்ட் காரின் உட்புறம் உள்ள அதே டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக டாடா நெக்ஸான் காரின் ஸ்டியரிங் டாடா கர்வ் காரில் உள்ளதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே டாட்டா லோகோவும் பதிக்கப்பட்டுள்ளது.நெக்ஸான் மற்றும் கர்வ் கார்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இது போக சமீபத்தில் லீக்கான டாடா நெக்ஸான் காரில் சென்டர் கன்சோலில் டச் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் சிஎன்ஜி பட்டன் ஒன்று இருப்பதும் தெரிய வருகிறது. இதன் மூலம் கர்வ் காரில் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களுடன் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tata frest trademark

ஆனால் டாடா கர்வ் காருக்கு ஒரு இவி காராகவே முதலில் உருவாக்கப்பட்டதால் இவி வெர்ஷனும் அதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தான் டாடா நிறுவனம் ஃபிரெஸ்ட் என்ற பெயரை டிரேட் மார்க் செய்துள்ளது. இந்தப் பெயரை டாடா கர்வ் காரின் புரோடெக்ஷன் மாடலுக்கு வைக்கும் என கூறப்படுகிறது‌.அப்படி என்றால் டாடா கார் விற்பனைக்கு வரும்போது டாடா ஃபிரெஸ்ட் என்ற பெயரில் விற்பனைக்கு வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் கார் அந்நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய வெற்றி தயாரிப்பாக இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது. இதனால் இந்த காரை தயாரிப்பதில் டாடா நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 28, 2023, 14:36 [IST]
English summary
Tata trademarked frest is this a new name for curvv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X