முழு சார்ஜில் 500 கி.மீ போகும் டாடா எலெக்ட்ரிக் கார்! இது மட்டுமில்ல 5 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்க போகுது!

டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற கூபே ஸ்டைல் காரை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியாவில் டாடா நிறுவனம் ஆட்டோமொபைல் துறைக்கு மிகவும் முக்கியமான நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் நீண்ட ஆண்டுகளாக தனக்கென சிறப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக இ்நநிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பான குவாலிட்டியில் இருப்பதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா நிறுவனம் தடம் பதித்தது.

முழு சார்ஜில் 500 கி.மீ போகும் டாடா எலெக்ட்ரிக் கார்! இது மட்டுமில்ல 5 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்க போகுது!

தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மார்கெட் பங்கை டாடா நிறுவனம் வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது. அதில் முதல் காராக டாடா கர்வ் என்ற கூபே என்ற ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக ஸ்டைலை அடிப்படையாகக் கொண்ட கார் இந்த காரை அந்நிறுவனம் பொதுப்பார்வைக்காக அறிமுகப்படுத்தியது. இந்த காரை கடந்தாண்டு ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது ஆட்டோ எக்ஸ்போ நடக்காததால் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த காரை டாடா நிறுவனம் டிஜிட்டலைஸ்டு தொழிற்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. இந்த காரை டாடா நிறுவனம் தனது 2 இவி என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு சார்ஜில் 500 கி.மீ போகும் டாடா எலெக்ட்ரிக் கார்! இது மட்டுமில்ல 5 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்க போகுது!

இந்த காரை டாடா நிறுவனம் நெக்ஸான் காரை விட ஒரு படி உயர்ந்த இடத்தில் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் பயன்படுத்தவுள்ள பேட்டரி மற்றும் இந்த கார் தரவுள்ள ரேஞ்ச் தான் எனத் தெரிகிறது. இந்த காரின் பேட்டரி குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த கார் முழு சார்ஜில் 400-500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரேஞ்ச் கொடுத்தால் இந்த கார் நேரடியாக மாருதி நிறுவனம் இன்று காலை வெளியிட்ட மாருதி இவிஎக்ஸ் காருக்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் தனது முதல் காரின் விலையைக் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் பேட்டரியில் அதிக திறன் கொண்ட எல்எஃப்பி பேட்டரியை பயன்படுத்தப்போவதாகத் தெரிகிறது. இதனால் இந்த கார் ரூ13-15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதற்குப் போட்டியாகக் களம் இறங்கும் இந்த காரும் மார்கெட்டிற்கு வரும் போது ரூ15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

முழு சார்ஜில் 500 கி.மீ போகும் டாடா எலெக்ட்ரிக் கார்! இது மட்டுமில்ல 5 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்க போகுது!

இந்த டாடா கர்வ் காரின் முக்கியமான அம்சம் அந்த கார் வாங்கப்போகும் கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்காக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கார் குளோபல் என்சிஏபி ரேட்டிங்கில் 5 ஸ்டார் பெறும் அத்தனை தகுதியும் இந்த காருக்கு இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த காரில் உள்ள முக்கியமான அம்சமாக எல்இடி ஹெட்லைட்கள், சதுரமான வீல்ஆர்ச், நாட்ச்பேக் ஸ்டைல் கொண்ட பூட், மேலும் இந்த கார் 4 வீல் டிரைவ் காராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் உட்புறத்தை பொறத்தவரை ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ரோட்டரி நாப் கியர், என ஏகப்பட்ட அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது எல்லாம் டாடா கர்வ் கார் குறித்து வெளியில் பேசப்படும் விஷயங்கள் தான் இன்று இந்த கார்களை பொது பார்வைக்குக் கொண்டு வந்ததோடு இந்த டாடா நிறுவனம் நிறுத்திக்கொண்டது. இது குறித்த எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த கார் எப்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி விற்பனைக்கு வரும் என்ற விபரம் வெளியாகவில்லை. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 11, 2023, 18:54 [IST]
English summary
Tata unveils curvv ev concept car in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+