டாடா காருல இருந்த அந்த ஒரு குறையையும் நீக்கிட்டாங்க... இனி மாருதிக்கு அடி மேல அடி விழ போகுது...

டாடா மோட்டார்ஸ் அதன் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு கார் மாடல்களிலும் அதி நவீன பாதுகாப்பு கருவியை சேர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் மாடல்களையே தற்போது நிறுவனம் வெளியீடும் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளாக ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டும் இருக்கின்றன. இவற்றின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே தற்போது இந்திய சந்தையில் டாட வெளியீடு செய்திருக்கின்றது. அப்டேட்டின் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை இந்த கார் மாடலில் டாடா சேர்த்து உள்ளது.

டாடா

சூப்பரான தொழில்நுட்பம்

குறிப்பாக, ஏற்கனவே அதிக உறுதியான மற்றும் பாதுகாப்பான கார் மாடல்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இவற்றை இன்னும் கூடுதல் பாதுகாப்பு திறன் கொண்டதாக டாடா அப்டேட் செய்து இருக்கின்றது. நவீன காலத்தின் மிக சிறந்த பாதுகாப்பு கருவியாக பார்க்கப்படும் அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டத்தை சஃபாரி மற்றும் ஹாரியர் கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

குறையை போக்கிட்டாங்க

இந்த அம்சம் (அடாஸ்) டாடா கார்களில் வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக டாடா கார்களில் இந்த அம்சம் வழங்கப்படாதது பெரும் குறையாக கருதப்பட்டது. இந்த நிலையிலேயே இக்குறையை டாடா நீக்கி இருக்கின்றது. ஆகையால், ஒட்டுமொத்த இந்திய வாகன ஆர்வலர்களையும் இந்த தகவல் ஈர்த்துள்ளது. இந்த இரு கார் மாடல்களுக்கும் தற்போது முன் பதிவுகள் தொடங்கி இருக்கின்றன.

டாடா

இந்த அம்சத்தினால இத்தன வசதிகளை பெற்றுக் கொள்ள முடியுமா?

வெளியீட்டைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் விதமாக இந்த பணியையும் கையோடு டாடா மோட்டார்ஸ் தொடங்கி இருக்கின்றது. அடாஸ் அம்சத்தின் வாயிலாக பல்வேறு பாதுகாப்பு வசதிகளை புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில், அவசரகால தானியங்கி பிரேக்கிங் (autonomous emergency braking), டிராஃபிக் சமிக்ஞை உணர்ந்து செயல்படும் திறன் (traffic sign recognition), ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, ஃபார்வார்டு கொல்லிசன் வார்னிங் (forward collision warning), லேன் டிபார்ச்சர் வார்னிங் (lane departure warning), பிளைண்ட் ஸ்பாட்டைக் கண்டறிதல் (blind spot detection), லேன் மாறும்போது அதுகுறித்து எச்சரிக்கும் வசதி (lane change alert) மற்றும் இதன் உடன் 360 பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட வசதிகளையும் பெற முடியும்.

டாடா

பிரீமியம் வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கு

இந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினலாயே புதிய அப்டேட் செய்யப்பட்ட டாடா கார் மாடல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த தொழில்நுட்ப வசதி மட்டுமின்றி இன்னும் சில பிரீமியம் வசதிகளையும் அப்டேட் வாயிலாக டாடா மோட்டார்ஸ் இரு கார் மாடல்களிலும் சேர்த்து உள்ளது. பனோரமிக் சன்ரூஃப்பும், இதை சுற்றி ஆம்பியன்ட் லைட்டுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.

இத்துடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக 10.25 அங்குல அளவுள்ள திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. முன்னதாக 8.8 அங்கு திரையே வழங்கப்பட்டு இருந்தது. இதையே தற்போது நீக்கி சற்று பெரியதாக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்த திரை ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது. இதுதவிர, ஆறு மொழிகளில் குரல் கட்டளை வழங்கும் வசதி இதற்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

டாடா

இந்த திரை உடன் சேர்த்து 7 அங்குல நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த கார்களில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அனைத்து அம்சங்களையும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஹாரியர் மற்றும் சஃபாரியில் டாடா வழங்கி இருக்கின்றது. இதன் வருகை ஏற்கன விற்பனையில் இருக்கும் பிற எஸ்யூவி ரக கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது.

எத்தன பேருக்கு போட்டி தெரியுமா?

எம்ஜி ஹேக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட கார் மாடல்களுக்கே புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்களின் வருகை போட்டியாக அமைந்து இருக்கின்றது. மோட்டாரை பொருத்த வரை இந்த காரில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளையில், புதிய பிஎஸ்6 கட்டம் இரண்டுக்கு ஏற்றவாறு எஞ்ஜினில் லேசான மாற்றங்களைச் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டாருலையும் சின்ன மாற்றம் செஞ்சிருக்காங்க

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த புதிய மாசு உமிழ்வு விதி அமலுக்கு வர இருக்கின்றது. 2.0 லிட்டர் டர்போ டீசல் மோட்டாரே இரு கார் மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இன்னும் இந்த கார்களின் விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் அதுகுறித்த தகவல்களும் அதிகாரப்பூர்வமாக தற்போது கார் வெளியீடு செய்யப்பட்டிருப்பதைபோல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 16, 2023, 16:44 [IST]
English summary
Tata unveils harrier safari with adas feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X