ஓடியாங்க, ஓடியாங்க டாடா கார்களின் விலை ரூ1.40 லட்சம் வரை தள்ளுபடில தராங்களாம்! அடுத்த மாசம் விலை கூடுது!
டாடா நிறுவனம் இந்த வருட கடைசிக்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி டாட்டா கார்களை ரூபாய் 1.40 லட்சம் வரையிலான தள்ளுபடி விலையில் வாங்க வாய்ப்புகள் தற்போது பிறந்துள்ளன. நீங்கள் இப்பொழுது டாடா நிறுவனத்தின் காரை வாங்கும் ஐடியாவில் இருந்தால் உடனடியாக டாடா ஷோரூமிற்கு செல்லுங்கள் இதுதான் டாடா கார் வாங்க சரியான நேரமாக இருக்கும்.
2023-ம் ஆண்டு நிறைவடையும் நிலையில் இந்த ஆண்டுக்கான கடைசி தள்ளுபடியாக டாடா நிறுவனம் வருட கடைசி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் கார் முதல் ஃபிளாக்ஷிப் கார் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சிறப்பான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. டாடா நிறுவனம் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் என மக்கள் நம்பி வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்த டிசம்பர் மாதம் வருட கடைசி தள்ளுபடியாக டாடா நிறுவனம் தனது என்ட்ரி லெவல் டியாகோ ஹேட்ச் காருக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி நேரடி வாடிக்கையாளர் தள்ளுபடி 40,000, எக்சேஞ்ச் போனதாக ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடி 5,000 என மொத்தம் 60,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது.

இதில் ஏஎம்டி வேரியன்டை பொறுத்தவரை வாடிக்கையாளர் நேரடி தள்ளுபடி மட்டும் ரூபாய் 30,000 ஆக இருக்கிறது. எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடி 5,000 மொத்தம் 50,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை இந்த மாதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிஎன்ஜி வேரியன்டை பொறுத்தவரை மொத்தம் ரூபாய் 80,000 வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர் தள்ளுபடி ரூ 60,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடி ரூ 5000 என மொத்தம் ரூபாய் 80,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதுவே ட்வின் சிலிண்டர் டியாகோ சிஎன்ஜி காரை பொறுத்தவரை வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூபாய் 30,000 மட்டுமே வழங்கப்படுகிறது. ரூபாய் 35,000 வாடிக்கையாளர் தள்ளுபடியாகவும் 15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் ரூபாய் 5000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அடுத்ததாக சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா பஞ்ச் காருக்கு ரூபாய் 3000 மட்டும் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேரடியாக வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூ25000, எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூ10,000 கார்ப்பரேட் தள்ளுபடி 5000 வழங்கப்படுகிறது. இதில் மேனுவல் கியர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்டிற்கு மட்டும் நேரடி வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூ30,000, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ10,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ5000 என மொத்தம் 45 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிஎன்ஜி அல்ட்ராஸ் காருக்கு நேரடியாக ரூ10,000 எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூ10,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 5000 என மொத்தம் ரூ25,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. டாடா ஹாரியர் பேஸ்ஃலிப்டிற்கு முந்தைய வெர்ஷன் அடாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வேரியண்ட் காருக்கு நேரடியாக வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூ75,000 எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூபாய் 50,000 கார்ப்பரேட் தள்ளுபடி ரூ10,000 என மொத்தம் ரூ 35,000 ஆயிரம் தள்ளுபடி விலையில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
அதே போல டாடா சஃபாரி காரிலும் பேஸ்லிஃப்டிற்கு முந்தைய வெர்ஷனை பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் அடாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வேரியன்ட் ரூபாய் 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி நேரடி வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூபாய் 75,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூபாய் 50,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 15,000 வழங்கப்படுகிறது.
நெக்ஸான் மேனுவல் கியர் காரை பொறுத்தவரை நேரடி வாடிக்கையாளர் தள்ளுபடி ரூ40,000 எக்சேஞ்ச் போனதாக ரூபாய் 20,000 கார்ப்பரேட் தள்ளுபடி ரூ10,000 என மொத்தம் ரூபாய் 70,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக டாடா நிறுவனம் இந்த காலண்டர் ஆண்டின் கடைசி மாதமாக இந்த மாதம் இருப்பதால் இந்த மாதம் சிறப்பான விற்பனையை பெற்று நல்ல வளர்ச்சியை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இந்த டிஸ்கவுண்டுகளை எல்லாம் அறிவித்துள்ளன
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அதிக அளவிலான தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். அப்படித்தான் டாடா நிறுவனமும் தற்போது தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் காரை வாங்கும் ஐடியாவில் இருந்தால் இது ஒரு நல்ல சான்ஸ்.


Click it and Unblock the Notifications









