தன்னுடைய ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த டீ கடை உரிமையாளர்! பேசாம ஒரு டீ கடைய வச்சு பொழைச்சுக்கலாமா!

'டீ கடை வச்சா பொழைச்சுக்கலாம்போல' என கூறும் அளவிற்கு டீ கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பலர் அசூர வளர்ச்சியை அடைந்து வருகின்றனர். இதற்குச் சான்றாகவே ஓர் சம்பவம் இந்தியாவில் தற்போது அரங்கேறி இருக்கின்றது. டீ கடை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய அசூர வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்த ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்.

இந்த அளவிற்கு தரமான வளர்ச்சியையே அந்த டீ கடை உரிமையாளர் அடைந்திருக்கின்றார். இவரின் இந்த வளர்ச்சிக்குப் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. 'டீ பாய்' (Tea Boy) எனும் டீ கடைகளுக்குச் சொந்தக்காரரே தன்னுடைய ஊழியர்களுக்குக் காரைப் பரிசாக வழங்கியவர் ஆவார்.

Tea boy gifts hyundai grand i10 nios cars to 3 employees

ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய மூன்று ஊழியர்களுக்கு அவர் காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இவர்களே நிறுவனத்தின் பெரும் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் என கூறப்படுகின்றது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 NIOS) காரையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தக் கார் இந்தியாவில் 5 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் தொடங்கி 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இத்தகைய அதிக தொகையில் விற்கப்படும் காரையே தன்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்கினை வகித்த ஊழியர்களுக்கு டீ பாய் கடை உரிமையாளர் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டிலே டீ பாய் நிறுவனத்தில் இந்த மூன்று ஊழியர்களும் பணிக்குச் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது நிறுவனத்திற்கு சொந்தமாக 410 விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அளவிற்கு மாபெரும் வளர்ச்சியை டீ பாய் கண்டதில் இந்த ஊழியர்களின் பங்களிப்பே முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இதன் அடிப்படையிலேயே விலையை பொருட்படுத்தாமல் டீ பாய் நிர்வாகம் அவர்கள் மூவருக்கும் காரை பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்தியர்கள் பலருக்கு பிடித்தமான கார் மாடலே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஆகம். இந்த காரில் இடம் பெற்றிருக்கும் நவீன கால அம்சங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றம் ஆகியவையே இந்த காரை இந்தியர்களின் பிரியமான வாகனங்களில் ஒன்றாக மாற்றி இருக்கின்றது.

எல்இடி டிஆர்எல்கள், புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், போல்டான தோற்றம் கொண்ட ரேடியேட்டர் கிரில், முக்கொம்பு டிசைனிலான பம்பர் என ஏகப்பட்ட அணிகலன்கள் இந்த காரின் அழகான தோற்றத்திற்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த காரில் பிரீமியம் தர அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல், டூயல் டோன் கேபின் மற்றும் சொகுசான இருக்கைகள் ஆகியவை ஐ10 நியாஸில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, ரியர் வியூ கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், முன் மற்றும் பின் பக்கத்தில் 'சி' டைப் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களைும் கிராண்ட் ஐ10 நியாஸின் உயர்நிலை தேர்வுகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தற்போது டீ-பாய் நிர்வாகம் வழங்கி இருப்பது என்ன தேர்வு என்பது துள்ளியமாக தெரியவில்லை. ஆகையால், அதன் விலை, அதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் பற்றி எங்களால் துள்ளியமாக கூற முடியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை சிறப்பிக்கும் விதமாக கார்களை பரிசாக வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் ஐடி நிறுவனம் தொடங்கி டைமண்ட் விற்பனை நிறுவனம் வரை என பலதரப்பட்ட நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களைச் சிறப்பிக்கும் விதமாக கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 20:30 [IST]
English summary
Tea boy gifts hyundai grand i10 nios car to 3 employees
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+