மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் இந்த காருக்காக தான் வெயிட்டிங்! ஹூண்டாய் வெளியிட்ட டீசருக்கே குஷியாகிட்டாங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 ஹேட்ச் பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தப் போகிறது. இதற்கான டீசரை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 கார் நீண்ட நாட்களாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஒரு காராக இருக்கிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் இந்த காரை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கார் தற்போது தயாராகி ஹூண்டாய் நிறுவனம் அந்த காரை சோதனை செய்து வருகிறது.

hyundai i20 facelift

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமாக சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் தற்போது இந்தியா சாலைகளில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஸ்பை ஷாட்கள் புகைப்படங்கள் எல்லாம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. முக்கியமாக இந்த காரில் கிரில் மற்றும் எல்இடி லைட் ஆகிய பாகங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்க பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. தற்போது விற்பனையாகி வரும் அதே டிசைன் தான் இருக்கிறது. ஆனால் காரின் டெயில் லைட் டிசைன் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல காரின் அலாய் வீல் டிசைனும் சின்ன மாறுதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.

புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரில் உட்புறம் சில கூடுதலான அம்சங்கள் இடம் பெற உள்ளது. முக்கியமாக இந்த காரில் செக்மெண்டிலேயே முதல்முறையாக டேஷ் கேமை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதில் ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டெர் காரில் பயன்படுத்திய அதே டேஷ்கேம் தான் இதிலும் பயன்படுத்த போகிறது. இதுபோக ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக சில அம்சங்களையும் சேர்க்க போகிறது.

அதன்படி இந்த காரில் எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 360 டிகிரி கேமரா, முன் பக்க பார்க்கிங் சென்சார், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய இந்த காரில் இடம் பெற்றுள்ளன. மேலும் இத காரில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ஸ் லைட்டிங் ஆகிய அம்சங்களும் உள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.2 லிட்டர் இன்ஜின் 82 பிஎச்பி பவரையும் 114.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஜினை பொறுத்தவரை 118 பிஎச்பி பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கியர் பாக்ஸை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு இன்ஜின்களும் ஹுண்டாய் ஐ20 காரில் நல்ல பெயரை பெற்றுள்ளதால் இதே இஞ்சினையே தொடர ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை தற்போது விற்பனையாகி வரும் காரின் விலையை விட சற்று விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் அம்சங்கள் இருப்பதால் அதற்கேற்றார் போல் விலை ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்த ஹூண்டாய் ஐ20 கார் ரூபாய் 7.46 லட்சம் முதல் ரூபாய் 11.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து; ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய ஐ20 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த காருக்கு இன்றும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் பலர் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும்போது இந்த காரின் விற்பனை மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

Article Published On: Friday, September 1, 2023, 19:09 [IST]
English summary
Teaser released for the hyundai i20 facelift before its official launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+