பாலிவுட்ல சீரியல்ல நடிச்சாகூட பணம் கொட்டும் போலிருக்கே.. இந்த நாடக நடிகர்கிட்ட எத்தன போர்ஷே இருக்கு பாருங்க!
பிரபல பாலிவுட் சீரியல் ஆக்டர் ராம் கபூர். இந்தி திரைப்படங்கள் சிலவற்றிலும் இவர் நடத்திருக்கின்றார். நம்மில் ஒரு சிலருக்கு இவரை தெரிந்திருக்கும், ஒரு சிலருக்கு தெரியாமலும் இருக்கும். வீட்டில் அதிகம் சீரியல் பார்க்கும் அம்மாவோ அல்லது மனைவியோ அல்லது நீங்களே ஓர் மிகப் பெரிய சீரியல் பிரியராக இருப்பின் இவரைக் கட்டாயம் அந்த குடும்பமே அறிந்திருக்கும்.
ஏனெனில் இவர் நடித்த சீரியல்கள் சில தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்கள் சில திரையிட்டிருக்கின்றன. அந்தவகையில், இவர் நடித்த 'படே அச்சே லக்தே ஹைன்' (Bade Achhe Lagte Hain) எனும் சீரியல் தமிழில் 'உள்ளம் கொள்ளை போகுதடா' எனும் பெயரில் ஒளிபரப்பட்டது.

இந்த சீரியல் ஆக்டரித்திலேயே விலை உயர்ந்த சொகுசு கார்கள் பல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "ஒரு சீரியல் நடிகரிடத்தில் இத்தனை சொகுச கார்களா!.." என ஆச்சரியப்படும் அளவிற்கு அவரிடத்தில் ஆடம்பரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன.
குறிப்பாக, இந்த நடிகரிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக மூன்று போர்ஷே நிறுவனத்தின் சூப்பர் கார் தயாரிப்புகள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

அந்தவகையில், 911டர்போ (911 Turbo S) என்று பொதுவாக அறியப்படும் போர்ஷே 992 டர்போ எஸ் (992 Turbo S) கார்கூட அவரிடத்தில் இருக்கின்றது. இதை அவரிடத்தில் வெகு சமீபத்திலேயே வாங்கினார் என கூறப்படுகின்றது. இதன் ஒன்றின் இந்திய மதிப்பு மட்டுமே ரூ. 3.6 கோடிகள் ஆகும்.
இதுமட்டுமல்ல அவரிடத்தில் போர்ஷேவின் இன்னும் இரண்டு புகழ்பெற்ற தயாரிப்புகள் ராம் கபூர் இடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 911 கர்ரேரா எஸ் மற்றும் 911 கர்ரேரா எஸ் கேப்ரியோலெட் (911 கன்வெர்டபிள்) ஆகிய கார்களும் அவரிடத்தில் இருக்கின்றன.

இவற்றின் விலைகளும் ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார்கள் மட்டுமின்றி இன்னும் பல அரிய மற்றும் சொகுசு கார்கள் சீரியல் ஆக்டர் ராம் கபூர் இடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுவே பலரும் இவரை பார்த்து வியக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
ரூ. 4.5 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி போர்டோஃபினோ எம், புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் வேகன் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி உள்ளிட்ட ஆடம்பர கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இவை அனைத்தைக் காட்டிலும் போர்ஷே 992 டர்போ எஸ்-ஸே அவர் வாங்கிய லேட்டஸ்ட் தயாரிப்பு என கூறப்படுகின்றது.

இந்த காரில் அதிகபட்சமாக 560 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதனால் 750 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். இத்தகைய பவர்ஃபுல் மோட்டார் கொண்ட போர்ஷே காரையே ராம் கபூர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரால் மணிக்கு 318 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதேவேளையில், இதனால் வெறும் 3.1 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை அசால்டாக எட்டிவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராம் கபூர் சில நேரங்களில் பொது சாலையில் செல்லும்போது இந்த கார்களில் சீறி பாய்வதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதிச் செய்யும் வகையில் அவர் சிக்னலில் இருந்து சீறி பாய்ந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் அவர்மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









