இந்த வண்டியை 19 லட்சம் பேர் புக்கிங் பண்ணீருக்காங்களா! 5 வருஷம் வெயிட் பண்ணாதான் கைக்கு கிடைக்குமாம்!

உலகமே ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் (Electric Vehicle) ஒன்று டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck). கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்லா சைபர்டிரக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது எலெக்ட்ரிக் பிக்அப் டிரக் ரகத்தை சேர்ந்த வாகனம் ஆகும்.

டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டே இதன் உற்பத்தி பணிகள் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுமார் 2 ஆண்டு கால தாமதத்திற்கு பின்பு தற்போதுதான் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் தாமதமாகியிருந்தாலும் கூட, டெஸ்லா சைபர்டிரக் அதன் வசீகரத்தை இழக்கவில்லை.

Tesla Cybertruck

ஆம், டெஸ்லா சைபர்டிரக்கிற்கு தற்போது வரை 19 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தற்போதைய நிலையில் டெஸ்லா சைபர்டிரக்கிற்கான காத்திருப்பு காலம் (Waiting Period) சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது இன்று முன்பதிவு செய்பவர்களுக்கு, 5 ஆண்டுகள் கழித்தே டெஸ்லா சைபர்டிரக் டெலிவரி செய்யப்படும். டெஸ்லா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைப்பதற்கான பணிகளை தற்போது மும்முரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

Elon Musk-Modi

அப்போது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் (CEO), டிவிட்டர் (Twitter) நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கை (Elon Musk) அவர் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு, டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் நுழையும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைத்து எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், மிகவும் குறைவான விலையில் (Price) புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த தகவல் இந்தியாவில் உள்ள டெஸ்லா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கான டெஸ்லா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா சைபர்டிரக்கிற்கு 19 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது டெஸ்லா சைபர்டிரக்கின் போட்டி மாடல்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம். ஆனால் டெஸ்லா சைபர்டிரக் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

More from DriveSpark

Article Published On: Sunday, July 23, 2023, 19:13 [IST]
English summary
Tesla cybertruck 19 lakh bookings 5 years waiting period full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+