10 லட்சம் பேர் இந்த காரை புக் பண்ணீட்டு 5 வருசமா காத்திருக்காங்க! ஒரு வழியா டெலிவரி தேதியை அறிவித்த டெஸ்லா!
டெஸ்லா நிறவனத்திடம் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சைபர் டிரக் காரின் டெலிவரியை துவங்கும் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தானியங்கி கார்களை தயாரித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்நிறுவனம் சைபர் டிரக் என்ற புதிய ரக பிக்கப் வாகனம் ஒன்றை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

இந்த கார் குறித்த புரொடெக்ஷன் மாடல் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. பலர் இந்த காரை வாங்குவதற்காக புக்கிங் செய்திருந்தனர். டெஸ்லா நிறுவனம் இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 100 அமெரிக்க டாலரை முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும், இதை வாடிக்கையாளர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும், கார் விற்பனை செய்யும் போது இந்த பணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் கார்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தார். இது மட்டுமல்ல இதுவரை அந்த காரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் புக் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வந்துள்ள ஃப்ரீ-புக்கிங்கின் படி டெஸ்லா சைபர்டிரக் கார்களை தயாரித்து முழு புக்கிங்கிற்கும் டெலிவரியை முடிக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தால் ஆண்டுக்கு தற்போது 1.25 லட்சம் சைபர் டிரக் கார்களை மட்டுமே தயாரிக்க வசதி உள்ளது. இதை 2.50 லட்சமாக மாற்ற டெஸ்லாவிடம் திட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கு 2025 ஆம் ஆண்டு வரை காலம் எடுக்கும்.
சைபர் டிரக் காரை தயாரிக்கும் பணி சற்று மெதுவாக தான் நடக்கும். இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் இந்த காரின் பாடி அதிக பலம் வாய்ந்த ஸ்டேயின்லெஸ் ஸ்டீல் பாடியாக இருப்பதால் இதை தயாரிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது. எந்த நாட்டில் இந்த காரை வாங்குகிறார்கள்? அந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டிய போக்குவரத்து வசதி எப்படி இருக்கிறதுஉ என்பதை எல்லாம் பொறுத்துதான் இந்த வாகனம் குறித்த காத்திருப்பு காலம் முடிவு செய்யப்படும்.
டெஸ்லா நிறுவனம் இந்த காரை முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தியது. இந்த கார் அப்பொழுது 2 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என டெஸ்லா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்களை நிறுவனம் சந்தித்தது.
இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் இதன் தயாரிப்பு பணி முடங்கியது. இந்நிலையில் இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அறிவிப்பும் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை.
இந்நிலையில் தான் இந்நிறுவனத்தின் சிஇஓ முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த காரின் முதல் டெலிவரி வரும் நவம்பர் 30ஆம் தேதி துவங்கும் என அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்த காரின் விலை குறித்த விபரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் நிச்சயம் 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வரையிலான விலையை விட தற்போது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காரில் மூன்று மோட்டார் செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் இந்த காரின் தயாரிப்பு துவங்கியது. இந்த ஆண்டு டெஸ்ட்லா நிறுவனம் இதுவரை மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய கார்களை 13 லட்சம் கார்கள் மற்றும் மாடல் எஸ் காரை 44 ஆயிரம் கார்கள் வரை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் இந்த டெஸ்லா சைபர் டிரக் காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. உலக நாடுகளில் பிக்கப் போன்ற வாகனத்தை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் டெஸ்லா சைபர் டிரக் காரையும் வாங்க ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த கார் டெலிவரி செய்யப்படும்போது இந்த காரில் உள்ள பல்வேறு விஷயங்கள் நமக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications









