இந்தியா இல்லைங்க உலகமே எதிர்பார்த்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது.. எலன் மஸ்க் காட்டுல இனி பண மழைதான்!
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கார் மாடலின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன கார் மாடல்? அதன் சிறப்புகள் என்ன? ஏன் உலகமே அந்த காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது? இதுபோன்ற அந்த கார் குறித்த அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா இருக்கின்றது. எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் டுவிட்டரின் உரிமையாளரே இந்த நிறுவனத்தின் சொந்தக்காரரும் ஆவார். ஆமாங்க, உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க்கிற்கு சொந்தமானதே இந்த நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்ப்பான டெஸ்லா சைபர் ட்ரக் (Tesla Cybertruck)-இன் டெலிவரி பணிகளே தற்போது தொடங்கி இருக்கின்றது. மிகவும் தனித்துவமான ஓர் வாகனமே இது ஆகும். இது மின்சாரத்தில் இயங்கும். அதுதவிர, புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட வாகனமாகவும் இதனை டெஸ்லா வடிவமைத்திருக்கின்றது.
மேலும், வழக்கமான கார்களைப் போல் அல்லாமல் இந்த காரின் மேற்பரப்பில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலையே டெஸ்லா பாடி பேனலாக பயன்படுத்தி இருக்கின்றது. பெரும்பாலான கார்களில் ஃபைபர் பேனலே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டெஸ்லா இந்த ட்ரக்கின் வெளிப்புறத்திற்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்கும் விதமாக ஸ்டீல் பேனல்களை பயன்படுத்தி இருக்கின்றது.

டெஸ்லா சைபர் 79,990 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 66.65 லட்சம் ஆகும். இந்த விலைக்கே அனைத்து வீல்களும் வசதிக் கொண்ட தேர்வை டெஸ்லா விற்பனைக்கு வழங்குகின்றது. இத்தகைய சிறப்புமிக்க எலெக்ட்ரிக் ட்ரக்கின் டெலிவரி பணிகளே தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் உயர் நிலை தேர்வு சைபர் பீஸ்ட் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். அதற்கு 99,990 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 83 லட்சம் ஆகும். அனைத்து இந்திய ரூபாய் மதிப்பும் தோராயமாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த இரண்டைக் காட்டிலும் மலிவு விலை தேர்வு விற்பனைக்கு வர காத்திருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அது விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2025 ஆம் ஆண்டிலேயே அந்த மலிவு விலை சைபர்ட்ரக் விற்பனைக்கு வரும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
60,990க்கும் குறைவான அமெரிக்க டாலர்களுக்கு அது விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. அதாவது 50 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இது விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், இந்த விலைகள் நிறுவனம் முன்னதாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் மிக மிக அதிகம் ஆகும். 2019 ஆம் ஆண்டிலேயே இந்த சைபர்ட்ரக் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது 40,000 அமெரிக்க டாலர்களுக்கே அது விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கூடுதல் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு சைபர்ட்ரக் விற்கப்படுகின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது. சைபர்ட்ரக்கில் பெரிய திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.
18.5 அங்கு தொடுதிரை வசதிக் கொண்ட திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை டேஷ்போர்டின் மையப் பகுதியில் கிடைமட்டமாகப் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த திரையுடன் சேர்த்து 9.4 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட மற்றுமொரு திரையும் இந்த சைபர் ட்ரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை பின் பக்க பயணிகளுக்கானது ஆகும்.
இதுபோன்று இன்னும் பல நவீன கால அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் வாகனம் தனக்குள் தாங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக ரேஞ்ச் விஷயத்தில் இந்த வாகனம் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது. இதன் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு ஓர் முழு சார்ஜில் 547 கிமீ ரேஞ்சையும், சைபர் பீஸ்ட் தேர்வு முழு சார்ஜில் 514 கிமீ ரேஞ்சையும் வழங்கும்.
இந்த ரேஞ்ச் திறனுடன் கூடுதல் ரேஞ்சை வழங்கும் பேட்டரி பேக்கையும் கூடுதல் ஆப்ஷனாக வழங்க இருப்பதாக டெஸ்லா தெரிவித்து இருக்கின்றது. இதனை சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 241 கிமீ ரேஞ்சை பெற்றுக் கொள்ள முடியும். மின்சார மோட்டாரை பொருத்தவரை டூயல் மோட்டார் மற்றும் மூன்று மோட்டார் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.
டூயல் மோட்டார் கொண்ட சைபர்ட்ரக் 600 பிஎச்பி-யை வெளியேற்றும். மேலும், இதனால் வெறும் 3.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும் எட்டிவிட முடியும். இதன் மூன்று மோட்டார் கொண்ட ஆப்ஷன் அதிகபட்சமாக 845 பிஎச்பி பவரை வெளியேற்றும்.
மேலும், இந்த தேர்வால் வெறும் 2.6 செகண்டுகளிலேயே இந்த தேர்வால் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இந்த திறன் மெக்லாரன் நிறுவனத்தின் சென்னா ஹைப்பர்கார் (McLaren Senna hypercar)ஐக் காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் வேகம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது அமெரிக்காவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றது. இந்த காருக்கு அரபு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் தொடங்குவதற்கு முன்னரே உலக நாடுகள் பலவற்றில் இருந்து ப்ரீ புக்கிங் கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இக்காருக்கான டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









