டொயோட்டா தலையிலேயே கொட்டி ஓரமா ஒக்காற வைத்த டெஸ்லா.. உலகின் நம்பர் 1 நிறுவனத்திற்கு இப்படி ஒரு அடியா!
உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனம் டெஸ்லா (Tesla). இந்த நிறுவனம் மின்சார கார் (eCar), சோலார் ரூஃப் (Solar Roof), சோலார் பேனல்கள் (Solar Panels) மற்றும் பவர்-வால் (Power Wall) உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இருப்பினும் இதன் முக்கிய தயாரிப்பாக எலெக்ட்ரிக் கார்களே உள்ளன. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் மாடல் எஸ் (Model S), மாடல் 3 (Model 3), மாடல் எக்ஸ் (Model X) மற்றும் மாடல் ஒய் (Model Y) என நான்கு விதமான கார் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் மாடல் ஒய் தற்போது உலகின் நம்பர் விற்பனையாகும் காராக மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 53 உலக நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை ஜேடே (JATO) உறுதிச் செய்திருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே இந்த வரலாற்று சாதனையை டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த காலங்களில் இந்த இடத்தை டொயோட்டாவின் கொரோல்லா (Toyota Corolla) கார் அலங்கரித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த இடத்தையே டெஸ்லாவின் மாடல் ஒய் கொரோல்லாவிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கின்றது. இதனால் உலகின் நம்பர் 1 செல்லிங் கார் எனும் மகுடம் டெஸ்லா மாடல் ஒய்-யின் தலைக்கு தற்போது சூட்டப்பட்டு இருக்கின்றது.

இந்த கார் டொயோட்டாவின் கொரோல்லாவை மட்டுமல்ல அந்த நிறுவனத்தின் ஆர்ஏவி 4 (RAV4) மாடலையும் விற்பனையில் வீழ்த்தி இருக்கின்றது. இவை இரண்டுமே உலகின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்கள் ஆகும். உலக சந்தையில் டொயோட்டா கொரோல்லா பன்முக உடல் தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
செடான், வேகான் மற்றும் ஹேட்ச்பேக் ஆகிய அவதாரங்களில் கொரோல்லா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே தலையில் தட்டி இரண்டாம் இடத்திற்கு டெஸ்லா மாடல் ஒய் தள்ளி விட்டிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் ஒட்டுமொத்தமாக டெஸ்லா மாடல் ஒய் 267,200 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.

இத்தகைய அதிகபட்ச யூனிட்டுகள் விற்பனையாகிய காரணத்தினாலேயே மாடல் ஒய் உலகின் நம்பர் 1 விற்பனையாகும் காராக மாறியிருக்கின்றது. இது உலக அளவில் 69 சதவீதம் சந்தைப் பங்காகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் டொயோட்டா கொரோல்லா 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 256,400 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது.
இதில், கூடுதல் சுவாரஷ்யம் என்னவென்றால் நிறுவனம் விற்பனைச் செய்திருக்கும் பெரும்பாலான மாடல் ஒய் கார்கள் சீனாவில் வைத்து தயாரிக்கப்பட்டவை ஆகும். நிறுவனத்தின் மிகப் பெரிய கார் உற்பத்தி ஆலை இங்கு இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. சீனாவிலும் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சொல்லப்போனால் நிறுவனத்தின் தாய்நாடான அமெரிக்காவைக் காட்டிலும் சீனாவில் வரவேற்பு இரட்டிப்படைந்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா கொரோல்லா காருக்கு கிடைத்து வந்த வரவேற்பு லேசாக சரிவைச் சந்தித்து இருக்கின்ற காரணத்தினாலேயே அது தற்போது உலகின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சரிந்திருக்கின்றது.
சீனாவில் 29 சதவீதமும், அமெரிக்காவில் 10 சதவீத விற்பனை வீழ்ச்சியையும் இந்த கார் சந்தித்து இருக்கின்றது. அதேவேலையில் டெஸ்லா மாடல் ஒய் காரின் கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் வசீகரிக்கும் சிறப்பு வசதிகளின் காரணத்தினால் அது முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
டூயல் எலெக்ட்ரிக் மோட்டார், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், ஓர் முழு சார்ஜில் 330 மைல் (531) தூரம் ரேஞ்ஜ் திறன் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
மாடல் ஒய் (47,490 அமெரிக்க டாலர்களுக்கும்), மாடல் ஒய் லாங் ரேஞ்ஜ் (50,490 அமெரிக்க டாலர்களுக்கும்) மற்றும் மாடல் ஒய் பெர்ஃபார்மன்ஸ் (54,490 அமெரிக்க டாலர்களுக்கும்) விற்கப்பட்டு வருகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 39.22 லட்சம் - 45 லட்சம் அதன் விலையாகும். இத்தகை குறைவான விலையைக் கொண்டிருப்பதும் அந்த கார் உலகின் நம்பர் 1 காராக இருக்க காரணமாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் வேண்டுமானால் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கலாம். ஆனால், இந்தியா வாகன உலகின் தலைவனாக மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. ஆம், இதுவே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஆகும். மிக மிக குறைவான விலை, அதிக இட வசதி என அனைத்திலும் சிறப்பு வாய்ந்ததாக இந்த கார் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









