இந்தியாவுக்கு வரவேண்டியது மிஸ் ஆகிடுச்சு! உலகின் மிகப்பெரிய இவி ஆலையை உருவாக்கும் டெஸ்லா! எங்க வரப்போகுது?
உலகளவிலான ஆட்டோமொபைல் மார்கெட்டையே புரட்டிப் போட்ட நிறுவனம் டெஸ்லா, ஆப்பிள், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களே ஆட்டோ பைலட் கார்களை வெறும் சோதனை கட்டத்தில் மட்டும் வைத்திருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த காரை அமெரிக்கா போன்ற நகரங்களில் விற்பனைக்குக் கொண்டு வந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் எலான் மஸ்க்.
இவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மிகப்பெரிய அளவிலான டெஸ்லா கிகா ஆலையை நடத்தி வருகிறார். அங்க தான் அதிகமான டெஸ்லா கார்கள் தயாராகி வருகிறது. டெஸ்லாவின் வருகை ஆட்டோமொபைல் சந்தையைப் புரட்டிப் போட்டது மட்டுமல்ல ஆட்டோ பைலட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் எனச் சந்தையைப் பல விதங்களில் விரிவுபடுத்தியும் உள்ளது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை தயாரிப்புகளை வெளியிடத் தயாராகி வருகிறது. இதனால் இன்னும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான தொழிற்நுட் வசதிகளைக் கொண்ட கார்களை தயாரிக்க ஏற்பாடுகளைத் தயாரித்து வருகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமுறை கார்கள தயாரிக்க மெக்ஸிக்கோவில் தனது புதிய ஆலையை உருவாக்க முடிவு செய்துள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது முதலீட்டாளர்கள் தினத்தை இதை அறிவித்துள்ளது. இதற்காக ஒரு மாதிரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆலை தான் உலகின் மிகப்பெரிய இவி வாகனங்களைத் தயாரிக்கும் ஆலையாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் டெக்ஸாஸ் மாகாணத்தில் நிறுவியுள்ள ஆலை 2500 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிய வரும் ஆலையாகும். ஆனால் மெக்ஸிக்கோவில் இந்நிறுவனம் திட்டமிட்டு வரும் ஆலை சுமார் 4200 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்படப் போகும் ஆலையாகும். இது டெக்ஸாஸ் ஆலையை விட 68 சதவீதம் மிகப்பெரிய ஆலையாக இருக்கிறது. டெஸ்லா நிறுவனம் இதற்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது.
இந்த ஆலையில் சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாக பணியமர்த்தப்படவுள்ளனர். முதலில் வெறும் 5 பில்லியன் டாலரை மட்டும் முதலீடு செய்து 5 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்திருந்து. பின்னர் திட்டத்தை விரிவாக்கி முதலீட்டை 2 மடங்காக மாற்றி ஊழியர்களையும் 2 மடங்காக வைத்துள்ளது. இந்த ஆலையில் டிரைவிங் யூனிட், பேட்டரி செல் மற்றும் வாகன கட்டுமானம் என 3 பிரிவுகளாகச் செயல்படவுள்ளன.
இந்த ஆலையில் ஆண்டிற்கு 10 லட்சம் கார்களை தயாரிக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெஸ்லா கார்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆலை டெஸ்லா நிறுவனத்திற்கு அமெரிக்காவைத் தாண்டிய ஆலைகளில் 3வது ஆலையாகும். ஏற்கனவே சீனாவின் ஷாங்காய் மற்றும் ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரில் இந்நிறுவனம் ஆலைகளை அமைத்துள்ளது.
எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் தனது பிஸ்னஸை துவங்க இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வெளிநாட்டிலிருந்து கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதில் சிக்கல் இருப்பதைத் தீர்த்து வைக்க முடியாததால் இந்தியாவில் தனது பிஸ்னஸை துவங்க டெஸ்லா மறுத்துவிட்டது. ஆனால் இந்தியாவில் சட்ட விதிமுறைப்படி ஆலையைத் துவங்கி முற்றிலுமாக இந்தியாவில் டெஸ்லாக காரை தயாரித்தால் இந்தியாவில் குறைந்த விலையில் டெஸ்லா காரை விற்பனை செய்ய முடியும் என அரசு அறிவித்துவிட்டது.
இந்தியா இந்த திட்டத்தை அதன் பெரிய மார்கெட்டான அமெரிக்காவிற்கு அருகில் உள்ள மெக்ஸிக்கோவில் துவங்கியுள்ளதால் அமெரிக்க கார்களை அங்குத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருப்பதால் துவங்கியுள்ளது. அதே போல டெஸ்லா நிறுவனம் தெற்காசிய நாடுகளில் தனது தொழிலைத் துவங்க நினைத்தால் இந்தியா தான் நல்ல சாய்ஸ். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








