டெஸ்லாவை கோர்ட் வாசல் படி ஏற வைத்த கார் ஓனர்கள்! கோடி கணக்குல நஷ்டஈடு வாங்கபோறாங்க! ஏன் தெரியுமா?
டெஸ்லா கார்கள் அப்டேட் செய்யப்பட்ட பின்பு பேட்டரி பாதிக்கப்பட்ட ரேஞ்ச் குறைந்ததால், வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தை கோர்ட்டிற்கு இழுத்துள்ளனர். நஷ்ட ஈடுகேட்டு பதியப்பட்ட வழக்கு குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் சமீபத்தில் தனது கார்களுக்கான ஒரு அப்டேட் ஒன்றை வழங்கியது. பொதுவாக எந்த நிறுவனம் அப்டேட்டை வெளியிட்டாலும், அந்த அப்டேட் குறித்த தகவல்களை அந்த கருவியின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தி அதன்பின்னரே அப்டேட் செய்யப்படும். ஆனால் டெஸ்லா இந்த முறை தானா வைஃபையில் கனெக்ட் செய்தாலே அப்டேட் செய்யப்படும் விதமாக புதிய அப்டேட்டை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தது.

அந்த அப்டேட் டெஸ்லா மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய வாகனங்களுக்கு ரிலீஸ் செய்து. இந்த அப்டேட்டை பெற்ற சில கார்களில் இந்த அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி பெர்ஃபாமென்ஸ் குறைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட ரேஞ்ச் குறைந்துள்ளது. இதைக் கவனித்த கார் உரிமையாளர்கள் இது குறித்து கோர்ட்டில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின்படி டெஸ்லா வெளியிட்ட இந்த அப்டேட் அவர்களது பேட்டரி ஃபெர்பாமென்ஸை 20 சதவீதம் வரை குறைத்துள்ளது எனவும் சில கார் உரிமையாளர்களுக்கு பேட்டரி முழுவதுமாக பாதிக்கப்பட்டு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ12 லட்சம் வரை செலவு இழுத்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சில டெஸ்லா ஓனர்கள் இந்த அப்டேட்டை ரிவர்ஸ் செய்ய வேறு தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அவர்கள் 500-750 அமெரிக்க டாலர் செலவில் அந்த அப்டேட்டை ரிவர்ஸ் செய்துள்ளனர். இதையடுத்து அப்டேட் மூலம் அதிகமான செலவை இழுத்துவிட்ட டெஸ்லாவை எதிர்த்து கார் ஓனர்கள் குழுவாக வழக்கை தொடர்ந்துள்ளனர்.
டெஸ்லா தனது காரை ஒரு கம்ப்யூட்டர் போலக் கருதி அப்டேட் செய்தால் அந்நாட்டின் கம்ப்யூட்டர் ஃபிராடு சட்டத்தின் கீழ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். இதற்கான நஷ்ட ஈட்டை டெஸ்லா வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து டெஸ்லா இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இது போன்ற வழக்கு டெஸ்லாவிற்கு புதிதல்ல ஏற்கனவே இப்படியாகக் கடந்த 2021ம் ஆண்டு டெஸ்லா கார் உரிமையாளர்கள் இணைந்து டெஸ்லா மீது வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் டெஸ்லா நிறுவனம் நஷ்ட ஈடாக 19 லட்சம் அமெரிக்க டாலரை அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த அபராதத்தில் 4 லட்சம் அமெரிக்க டாலர் வக்கீல் ஃபீஸாவும், அதன் பின் இதர செலவுகள் போகப் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு 625 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது.அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 1743 டெஸ்லா மாடல் எஸ் கார் உரிமையாளர்கள். தற்போது அதே போல மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இதற்கும் வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா போன்ற ஒரு நிறுவனம் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்திருக்கக்கூடாது. வாகனத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாமல் அப்டேட் செய்தது ஒரு பாதுகாப்பு அற்ற செயல்பாடும் கூட இதற்கு அந்நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








