இந்த கார் கம்பெனி ஒரு விளம்பரம் கூட செய்யாது! இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா! ஆனா எல்லாம் மாற போகுது!

உலகம் முழுவதும் விளம்பரங்களுக்காக (Advertisment) கார் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்து கொண்டுள்ளன. ஆனால் டெஸ்லா (Tesla) நிறுவனம் அப்படிப்பட்டது கிடையாது. உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்றாக உள்ள டெஸ்லா, அமெரிக்காவை சேர்ந்தது.

பல்வேறு பெருமைகளை தன்வசம் வைத்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் விளம்பரங்களை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. ஆன்லைன், டிவி மற்றும் ரேடியோ என எங்குமே டெஸ்லா நிறுவனத்தின் விளம்பரங்கள் வராது. டெஸ்லா நிறுவனத்தின் இந்த வித்தியாசமான யுக்திக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

Tesla Model-3 Bonnet

டெஸ்லா நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், அதன் யூ-டியூப் (YouTube) சேனலில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனை பல லட்சக்கணக்கானோர் பார்க்கின்றனர். அத்துடன் டெஸ்லா கார்களின் அதிநவீன வசதிகளால் ஈர்க்கப்படும் உலகின் பிரபல மனிதர்கள் பலர், அவற்றை பற்றி தங்களது சமூக வலை தளங்களில் பதிவிடுகின்றனர். இதுவே டெஸ்லா கார்களுக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்து விடுகிறது.

அத்துடன் காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் பொறுமையாக இருந்து டெஸ்லா கார்களை டெலிவரி (Delivery) பெற்று கொள்கின்றனர். எனவே டெஸ்லா கார்களுக்கு விளம்பரத்திற்கான அவசியமே இல்லாமல் போய் விட்டது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) எலான் மஸ்க் (Elon Musk) மிகவும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்.

Tesla Model-3

கடந்த 2019ம் ஆண்டு அவர் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், விளம்பரங்களை வெறுப்பதாக அவர் கூறியிருந்தார். அத்துடன் விளம்பரத்திற்காக செலவு செய்யும் பணத்தை, கார்களை தரமானதாக தயாரிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த முடிவில் தற்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆம், மற்ற கார் நிறுவனங்களை போலவே, இனி டெஸ்லா நிறுவனமும் விளம்பரங்களை செய்ய போகிறது. டெஸ்லா நிறுவனம் வரும் காலங்களில் விளம்பரங்களை செய்யவுள்ளதாக எலான் மஸ்க் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். கார்களை விற்பனை செய்ய விளம்பரங்கள் என்ற வழக்கமான வழியை பின்பற்றாத எலான் மஸ்க் இப்படி ஒரு விஷயத்தை கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் இனி சிறிய அளவில் விளம்பரங்களை செய்து பார்க்கும் என எலான் மஸ்க் பேசியுள்ளார். அந்த விளம்பரங்கள் எப்படி செல்கின்றன? என்பதையும் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வித்தியாசமான மனிதராக அறியப்படும் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் டெஸ்லா நிறுவனம் எப்போதுமே வித்தியாசமான காரியங்களை செய்யும்.

எனவே அதன் விளம்பரங்களும் வித்தியாசமாக இருக்கும் என நாம் நம்பலாம். டெஸ்லா நிறுவனத்தின் விளம்பரங்களை காண, உங்களை போலவே நாங்களும் மிகவும் ஆர்வமாகதான் உள்ளோம். ஆனால் டெஸ்லா நிறுவனம் எப்போதில் இருந்து விளம்பரங்களை செய்யும் என்ற தகவல் தற்போது நமக்கு கிடைக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனங்களை விளம்பரங்களை செய்தால், செலவு அதிகரிக்கும். இதை விலை உயர்வு (Price Hike) என்ற பெயரில், வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தாமல் இருந்தால் சரி. அதேபோல் விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்து விட்டு, உற்பத்தி செலவை குறைக்கிறேன் என்ற பெயரில், டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் தரத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 23:43 [IST]
English summary
Tesla will advertise its cars elon musk full details here
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+