டெஸ்லாவின் இந்த கார் வந்தா டிரைவர் சம்பளத்தை மிச்சப்படுத்தலாம்.. ஒட்டுமொத்த உலகையும் கிரங்கடிக்க வச்சிட்டாங்க!

உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா (Tesla)-வும் ஒன்று. இந்த நிறுவனம் மின்சார கார் பிரியர்களைக் குஷியில் ஆழ்த்தக்கூடிய ஓர் சூப்பரான தகவலைத் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. அது முழுக்கு முழுக்க தானாக இயங்கும் காரை உருவாக்கும் பணியில் இறுதி நிலையை எட்டி இருப்பதாகவே தற்போது தகவலை வெளியிட்டு உள்ளது.

மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாகத் தானாக இயங்கும் மின்சார காரின் உற்பத்தி பணிகளை டெஸ்லா தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அடுத்த ஆண்டின் (2024) இறுதிக்குள் முழுமையாகத் தானாக ஓடும் கார்களை நிறுவனம் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tesla full self-driving car

இதனை நிறுவனத்தின் சிஇஓ-ஆன எலான் மஸ்க்கும் உறுதி செய்திருக்கின்றார். இந்த உலகத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக பறக்கும் கார்கள் மற்றும் டிரைவரே இல்லாமல் இயங்கும் கார்கள் இருக்கின்றன. ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் சோதனையோட்டத்தின் அடிப்படையில் பறக்கும் கார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே டிரைவரே இல்லாமல் இயங்கும் கார்கள் அதன் ஆதிக்கத்தை செலுத்த தயாராகிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வின் சமீபத்திய தகவலின் வாயிலாகவே இது தெரிய வந்திருக்கின்றது. தல மஹிந்திர சிங் தோனியின் பிறந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வெகுவிமரிசையாகக் கொண்டாடி வரும் இந்தத் தருணத்தினலேயே டெஸ்லாவின் முழுமையாக தானாக ஓடும் எலெக்ட்ரிக் கார்பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Tesla model y rear profile

இதை அவர்கள் தெரிந்து செய்தார்களா அல்லது தெரியாமல் செய்தார்களா எனத் தெரியவில்லை. இருப்பினும், இதனால் தல தோனி ரசிகர்கள் லேசாகப் பெருமிதம் கொள்ள தொடங்கி இருக்கின்றனர். முழு தன்னாட்சி வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரின் வருகையைச் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் உறுதி செய்தார்.

வியாழக் கிழமை (நேற்று) அன்று ஷாங்காய் நகரில் செயற்கை நுண்ணறிவு மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றபோதே எலான் மஸ்க் இந்தத் தகவலைப் பகிர்ந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தத் தகவலே தற்போது வாகன உலகில் டிரெண்ட் ஆக தொடங்கி இருக்கின்றது.

Tesla model y

குறிப்பாக, மின்சார கார் பிரியர்கள் மத்தியில் எலான் மஸ்க்கின் இந்தத் தகவல் மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் போன்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களை இந்தத் தகவல் கலக்கத்தில் ஆழ்த்த செய்து இருக்கின்றது.

ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலவற்றின் விற்பனை பெருத்த அடியை வாங்கி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புதிதாக முழுக்க முழுக்க தானாக இயங்கும் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகள் இறுதி நிலையை எட்டி இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கின்றனர்.

அதேவேளையில், இந்தத் தகவலை மிகவும் உறுதியாகவும் அவர் கூறவில்லை. அவர், "நாங்கள் இப்போது முழுக்க முழுக்க தானாக ஓடும் எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கான இறுதி நிலையை எட்டிவிட்டோம் என நம்புகின்றோம்" என்றே அவர் கூறி இருக்கின்றார். அவரின் இந்த பேச்சு புதிர் போடும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஸ்க்கின் இந்தத் தகவல் மின்சார கார் பிரியர்களைக் குழுப்பத்தில் ஆழ்த்தவும் செய்திருக்கின்றது. இருப்பினும், வரும் 2024 ஆம் ஆண்டில் கட்டாயம் டெஸ்லாவின் தானாக ஓடும் எலெக்ட்ரிக் கார்பற்றிய ஏதேனும் ஓர் விபரம் வெளியாகிவிடும் என்கிற நம்பிக்கையில் டெஸ்லா கார் பிரியர்கள் மனதைத் தேற்றத் தொடங்கி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, July 7, 2023, 21:28 [IST]
English summary
Tesla will be bring fully autonomous self driving e cars soon here is full details
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X