விபத்தில் சிக்கிய டெஸ்ட் டிரைவ் கார்.. எவ்ளோ காச புடுங்கினாங்க தெரிஞ்சா டெஸ்ட் டிரைவ்வே கேக்க மாட்டீங்க!

புதிய வாகனத்தை வாங்கும் முன் அந்த வாகனம் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது. இதற்காகவே வாகன விற்பனையாளர்கள் தங்களை நாடி வரும் வாடிக்கையளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் நல் வாய்ப்பை வழங்குகின்றன. இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தொடங்கி விலையுயர்ந்த ஆடம்பர காரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வரை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு இச்சிறப்பு சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே டெஸ்ட் டிரைவிற்காக எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளன. இதைவிட கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, விபத்தை ஏற்படுத்தியவரிடமே அந்த காரை பழைய நிலைமைக்கு மீட்டெடுப்பதற்கான பெரும் தொகை வசூல் செய்யப்பட்டு இருக்கின்றது.

டெஸ்ட் டிரைவ்

அதாவது, டெஸ்ட் டிரைவ் காரை ஓட்ட தெரியாமல் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய நபரிடம் இருந்து ஷோரூம் நிர்வாகம் லட்சக் கணக்கான ரூபாயை நஷ்ட ஈடாக வசூல் செய்திருக்கின்றது. கடந்த காலங்களில் டெலிவரி எடுக்கச் சென்ற வாகனங்கள் விபத்தைச் சந்தித்தது பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

வாடிக்கையாளர்களின் அஜாக்ரதையான செயலினாலேயே அனைத்து விபத்து சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. இதேபோல், டெஸ்ட் டிரைவிற்கு எடுத்து செல்லும் வாகனங்களும் விபத்தைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், அது அரிதினும் அரிதாக நடைபெறும். அப்படியான ஓர் நிகழ்வே இப்போது அரங்கேறி இருக்கின்றது. உத்தரபிரதேசம் மாநிலம், மீரட்டிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

டெஸ்ட் டிரைவ்

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரே டெஸ்ட் டிரைவின்போது விபத்தில் சிக்கியிருக்கின்றது. நிறுவனத்தின் டாப் மூவிங் காராக விட்டாரா எஸ்யூவி இருக்கின்றது. மிக மிக அமோகமான வரவேற்பு இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். இந்த மாதிரியான சூழலிலேயே டெஸ்ட் டிரைவ் வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது.

விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ. 1.40 லட்சம் வரை அக்காருக்கு செலவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பில்லே விபத்தை ஏற்படுத்தியவரிடம் ஷோரூம் நிர்வாகம் வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான சிக்கல்களை தவிர்க்கவே டெஸ்ட் டிரைவின்போது அதிக கவனம் தேவை என வலியுறுத்தப்படுகின்றது.

டெஸ்ட் டிரைவ்

குறிப்பாக, கார் ஓட்டுவதில் நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே டெஸ்ட் டிரைவ் எடுக்க வேண்டும். புதிய காரை ஓட்டும்போதும் அல்லது வாங்க செல்லும்போது உற்சாகமிகுதி என்பது அனைவருக்கும் ஏற்படும். இந்த உற்காசமே பல விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றது. ஆகையால், வாகனத்தை வாங்கச் செல்லும்போது அல்லது ஓட்டி பார்க்க செல்லும்போது அதிக படபடப்பு உடன் நீங்கள் இருப்பதை உணர்ந்தால் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம்.

உடனடியாக பின் வாங்குவதே நல்லது. இல்லை எனில் டெஸ்ட் டிரைவின்போது அதிக வேகத்தில் இயக்கவேக் கூடாது. ஏனெனில் அதிக வேகம் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த விபத்திற்கும் அதிக வேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதிவேகத்தில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது மினி டிரக் ஒன்று குறுக்கே வந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்து கிராண்ட் விட்டாரா மினி வேன் மீது மோதி இருக்கின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி சென்றவருக்கும், டீலர்ஷிப் ஷோரூமைச் சேர்ந்த ஊழியருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இருவரும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் தப்பி இருக்கின்றனர்.

கிராண்ட் விட்டார எஸ்யூவி இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் மோட்டாரில் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இருவிதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், ஸ்ட்ராங் ஹைபிரிட்டின் மைலேஜ் திறன் அனைவரையும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது.

ஒரு லிட்டருக்கு அது 27 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும். இத்தகைய அதிக மைலேஜை வழங்குகின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் அமோக வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். 12.85 லட்ச ரூபாய் தொடங்கி ரூ. 19.49 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

உற்சாக மிகுதி அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்று. புதிதாக கார் காரியத்தை செய்யும்போது அனைவருக்கும் இது ஏற்படும். இந்த மாதிரியான சூழலில் நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தில் இருந்து பின் வாங்குவதே சிறந்தது. ஏனெனில், கடந்த காலங்களில் உற்சாகமிகுதி காரணமாக பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. மேலும், அதிக வேகத்தில் செல்வதை தவிர்ப்பது மிக முக்கியமானது.

Article Published On: Saturday, March 25, 2023, 8:30 [IST]
English summary
Test drive maruti grand vitara crashed
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+