சென்னை- மதுரை சிங்கிள் சார்ஜ்ல நிக்காம போகலாம்! வால்வோ சி40 ரீசார்ஜ் இவி காரோட விலை இவ்வளவு கம்மிதானா?
வால்வோ நிறுவனம் தனது சி40 ரீசார்ஜ் காரை இன்று ரூபாய் 61.25 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வால்வோ. இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் ஒரு முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் அதன் ஓனர்களுக்கு ஒரு சமூகம் அந்தஸ்தை பெற்றுத் தருகிறது என மார்க்கெட்டில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இதனால் பிரீமியமான செக்மெண்டில் மட்டும்தான் வால்வோ நிறுவனம் தனது கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் c40 ரீசார்ஜ் என்ற எலெக்ட்ரிக் காரை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் ஐயானிக் 5, கியா இவி 6 மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.
இந்த கார் மொத்தம் 6 விதமான கலர்களில் விற்பனைக்கு வருகிறது. கிறிஸ்டல் ஒயிட், ஆக்ஸிக்ஸ் பிளாக், ஃப்யூஷன் ரெட், கிளைவுடு ப்ளூ, சேஜ் கிரீன், ஃபேஜோர்டு ப்ளூ, ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. உங்களுக்கு பிடித்த கலரை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4440 மிமீ நீளம் 1910 மிமீ அகலம் 1591 மிமீ உயரம் கொண்டது. இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 42 பிஎச்பி பவரையும் 660 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் வருகிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்ற எட்டு மணி நேரம் ஆகும்.இதற்காக இந்த காரில் 78 கிலோ வாட் ஹவர் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
காரின் டிசைனை பொருத்தவரை முன்பக்கம் இந்நிறுவனத்தின் ஆஸ்தான டிசைனான ஹேமர் வடிவ டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தாலான கிரில் முன்பக்கம் இருக்கிறது. 19 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளன. ஸ்லோப்பிங் ரூப் லைன் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க கதவில் பிளாக் லிப்ஸ் ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் லைட்டை பொருத்தவரை எல்இடி டெயில் லைட் நீளவாக்கில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பேனரோமிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், அடாஸ் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் இந்த காரில் இருக்கிறது.
இந்த காரின் பிக்கப்பை பொறுத்தவரை 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. முழு சார்ஜில் இந்த கார் 530 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ரீசார்ஜ் செய்து கொண்டு நீண்ட தூர பயணத்திற்கு தாராளமாக எடுத்துச் செல்ல முடியும். 500 கிலோ மீட்டர் என்பது அதிகமான தூரம்தான்.
இந்த காருக்கான வாரண்டியை பொருத்தவரை மூன்று ஆண்டு கம்பிஹென்ஸிவ் வாரண்டியும், எட்டு ஆண்டு பேட்டரி வாரண்டி மற்றும் ஐந்து ஆண்டு டிஜிட்டல் சர்வீஸ் வாரண்டி வழங்கப்படுகிறது. இதுபோக 3 ஆண்டு சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் 3 ஆண்டு ரோடு சைடு அசிஸ்டன்ட் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் இந்த காருடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ 61.25 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வருகிறது. முதலில் புக் செய்யும் 500 பேருக்கு மட்டுமே இந்த விலையில் கார் விற்பனை செய்யப்படும் பின்னர் இந்த காரின் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் பொறுத்தவரை நாளை செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வால்வோ சி40 காருக்காக பிரீமியம் காரர்கள் பலர் காத்திருந்தார்கள் அவர்கள் எல்லோரும் நாளை முதல் கார்களை புக்கிங் செய்ய துவங்க கதவுகளை வாழ்வோ நிறுவனம் திறந்து விட்டுள்ளது இந்த கார் பிரீமியம் செக்மென்ட்டில் ஒரு நல்ல போட்டியை ஏற்படுத்தி சிறப்பான விற்பனையை பெறும் என நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








