இதுல ஒரு காரை வாங்கிட்டு உங்க வீட்டுல நிறுத்துனா போதும் ஊரே உங்களை பத்தி தான் பேசும்! அப்படி என்ன கார் இது?

இந்தியாவில் அதிக இட வசதி கொண்ட அதே நேரம் ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் விரைவில் இந்தியாவிற்கு இப்படியான வசதிகள் கொண்டு வரவுள்ள கார்களை மக்கள் அதிகம் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அந்த கார்களை பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

ஒரு காருக்கான அடிப்படைத் தேவைகள் எல்லாம் அதன் பிரேம் கட்டமைக்கப்படும் போதே முடிவு செய்யப்பட்டு விடும். இப்படியாக அதிக இட வசதி மற்றும் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த பிரேம் கொண்ட கார்களில் இந்த வசதிகள் இருக்கும். இப்படியாக இந்தியாவில் அடுத்து வரவுள்ள லேடர் ஃபிரண்ட் கார்களை பற்றி தான் இங்கே நாம் காண போகிறோம்.

upcoming big suvs

மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ்: இந்தியா நிறுவனம் தனது பொலிரோ நியோ பிளஸ் என்ற காரை அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் நமக்கு சில தகவல் கிடைத்துள்ளன. அதன்படி இந்த கார் 4400மிமீ நீளமும் 1795மிமீ அகலமும் 1812மிமீ உயரமும் அதே நேரம் 2650மிமீ வீல் பேஸூம் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் 2390 கிலோ எடை கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இது 118பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது சீட்டர் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன.

upcoming big suvs

ஐந்து டோர் போர்ஸ் கூர்கா: போர்ஸ் நிறுவனம் தனது 5டோர் கொண்ட கூர்கா காரை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 5,6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி இந்த காரில் சதுர வடிவிலான ஹெட்லைட், டிவின்ஸ் ஷெட்டர் கிரில் ஆகியன உள்ளன. இதே தான் மூன்று டோர் வெர்ஷன் காரிலும் இருக்கிறது.

7 சீட்டர் காரில் மூன்றாவது வரிசையில் கேப்டன் சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கும் மத்திய வரிசையில் பெஞ்ச் சீட் வழங்கப்பட்டிருக்கும் இந்த காரின் இஞ்சினை பொறுத்தவரை 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த கார் 4 வீல் ஆப்ஷன் 3 டோர் வெர்ஷன் காரில் இல்லை, மற்றது எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.

upcoming big suvs

ஐந்து டோர் மஹிந்திரா கார்: மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் பிரபலமான காராக இருக்கிறது. இந்த தற்போது மார்கெட்டில் விற்பனையாகி வரும் மாருதி சுஸூகி ஜிம்னி காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்தக் காரும் லேடார் ஃபிரேமில் கட்டமைப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் அதன் 3 டோர் கொண்ட காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வித்தியாசத்திற்காக சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி காராக விற்பனைக்கு வருகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

upcoming big suvs

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்: டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரின் மூன்றாவது தலைமுறை அப்டேட் செய்யப்பட்ட கார் சர்வதேச அளவில் அடுத்த ஆண்டு முதல் பாதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை சமீபத்தில் வெளியான டக்கோமா பிக்கப் காரின் டிசைனில் இன்ஸ்பயர் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கார் டிஎன்ஜி எஃப் ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்பட்டது. இந்த காரில் உள்ள இன்டீரியரை பொறுத்தவரை தற்போது உள்ள காரை விட அதிக பிரிமியம் வசதி கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 7 சீட்டர் ஆப்ஷனும் டீசனில் ஹைபிரிட் ஆப்ஷனும் புதிதாக இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு சமீப காலமாக மவுசு அதிகமாகி வருகிறது. குடும்பத்துடன் ஒருவர் நீண்ட பயணம் செல்ல இந்த கார் ஏற்றதாக இருக்கும். அதிக பொருட்களை ஏற்றிச் செல்லவும், அதிக நபர்களும் இந்த காரில் செல்ல முடியும். புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வரும் இந்த காரில் அதிக இடவசதி, ஆஃப்ரோடு அம்சங்களும் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2023, 10:55 [IST]
English summary
These 4 upcoming big suvs from mahindra to toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X