பாதுகாப்புன்றதே இந்த கார்கள்ல கொஞ்சம்கூட இல்ல.. இருந்தாலும் இந்தியர்கள் 'ஈ' போல மொய்க்குறாங்க!
இந்தியர்கள் மத்தியில் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் மாடல்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாக டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இவை பாதுகாப்பு விஷயத்தில் மிக மிக சிறப்பான ரேட்டிங்கைப் பெற்றவை ஆகும். ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை இந்த கார் மாடல்கள் குவித்து இருக்கின்றன.
அதேவேளையில், இந்தியாவில் துளியளவும் பாதுகாப்பு திறன் இல்லாத கார்கள் மாடல்களும் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், துளியும் பாதுகாப்பு திறன் இல்லாத, அதேநேரத்தில் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): இந்தியாவின் பெஸ்ட் மற்றும் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. அதிக இட வசதி குறிப்பாக, மிகப் பெரிய ஹெட்ரூமைக் கொண்ட மலிவு விலை ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது.
சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும் இந்த கார் மாடல் அதிகபட்சமாக 16,567 யூனிட்டுகள் விற்பனையாகின. இத்தகைய மாபெரும் சேல்ஸைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த கார் மாடல் பாதுகாப்பு விஷயத்தில் மண்ணைக் கவ்வும் அளவிற்கு இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஐந்துக்கு வெறும் ஒரே ஒரு ஸ்டார் ரேட்டிங்கையே இந்த கார் பெற்றிருக்கின்றது.

அதிலும், குழைந்தைகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் வெறும் பூஜ்ஜியத்தையே இந்த கார் பெற்றிருக்கின்றது. மாருதி சுஸுகி வேகன்ஆர் இந்தியாவில் ரூ. 5.55 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் பாதுகாப்பிற்காக டூயல் ஏர்பேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக், ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசன் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஏஎம்டி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என பற்பல அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், இந்தியர்களின் இந்த ஃபேவரிட் கார் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டையை விட்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியர்களின் மற்றுமொரு ஃபேவரிட் கார் மாடலாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதனை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மாடல் என்றுகூட கூறலாம். ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் அதிமான யூனிட்டுகள் வரை இந்த கார் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
சென்ற நவம்பர் மாதத்தில்கூட 15,311 யூனிட்டுகள் வரை இந்த கார் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் பவர் ஸ்டாரைப் போன்று இருக்கின்றது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் ஒரே ஒரு ஸ்டாரையே பெற்றிருக்கின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இந்தியாவின் விலை மலிவை கார் மாடல்களில் ஒன்றாகும். இதில் மட்டுமல்லைங்க, பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களிலும் ஒன்றாக ஆல்டோ கே10 காட்சியளிக்கின்றது. 2023 நவம்பரில் மட்டும் இந்த கார் மாடல் 8076 யூனிட்டுகள் வரை விற்பனையாகி உள்ளன.
ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் மாடல் வெறும் 2 ஸ்டார்களை பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு 0 ஸ்டார்களையும் பெற்றிருக்கின்றது. மேலே பார்த்த இரண்டு கார் மாடல்களைக் காட்டிலும் சற்று அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பு துளியளவும் உகந்ததல்லாத ஸ்டார் ரேட்டிங்குகள் இவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் மூன்றும் பாதுகாப்பான பயணத்திற்கு துளியும் உகந்தததல்லாத வாகனங்களாக இருந்தாலும், சேல்ஸில் மிக மிக சிறப்பான வரலாற்றை அவை பதிவு செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த கார்கள் விலை குறைவானவை, அதேவேளையில் பராமரிப்பு செலவு குறைவ என்பதாலும் அவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









