பணம் இருக்குதுன்னு ரோல்ஸ் ராய்ஸ் கிட்ட இதை எல்லாம் மாத்த சொல்லி கேட்காதீங்க! அப்புறம் அவமானம் தான் மிஞ்சும்!
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை பற்றி பலருக்கும் தெரியும். அந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் விலை மதிப்புமிக்கது. இந்த கார்களின் விலைக்கு மற்றொரு காரணம் இந்த காரில் உள்ள கஸ்டமைஷ்டு ஆப்ஷன்கள்தான். ஏகப்பட்ட கஸ்டமைஸ்டு ஆப்ஷன்களுடன் தான் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
காரின் சீட், சிட்டின் தையலுக்குப் பயன்படுத்தப்படும் நூலின் நிறம், காருக்கு அடிக்கப்படும் பெயிண்டின் நிறம், கலவை எனப் பல விஷயங்களை அந்த காரை வாங்கிய வாடிக்கையாளரே முடிவு செய்ய முடியும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த காரை வடிவமைத்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் இந்த நிறுவனம் ஒரு சில விஷயங்களை மட்டும் யாருக்காகவும் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் நிச்சயம் மாற்றாது இது என்னென்ன விஷயம் எனக் காணலாம்.

ஸ்பிரிட் ஆஃப் எஸ்டேஸி: 1911ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் இந்த ஸ்பிரிட் ஆஃப் எஸ்டேஸி பயன்படுத்தப்படுகிறது. இதை யார் திருட முயற்சி செய்து தொட்டாலும் இது உடனடியாக காருக்குள் சென்று விடும். இந்த ஸ்பிரிட் ஆஃப் எஸ்டேஸி இல்லாமல் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட விற்பனைக்கு வராது. கஸ்டமைஸ் ஆப்ஷனில் இந்த ஸ்பிரிட் ஆஃப் எஸ்டஸியை மாற்றவோ, வேண்டாம் என நிராகரிக்கவோ, ஏன் இதன் இடத்தை கூட மாற்றவோ முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதைச் செய்யாது.
செல்ஃப் லெவலிங் லோகோ: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் வீல்களில் ஆர்ஆர் என்ற அந்நிறுவனத்தின் லோகோ இருக்கும். வீல் எவ்வளவு வேகத்தில் சுற்றினாலும் அந்த லோகோ சுற்றாமல் நேராக இருக்கும். இதுவும் நமக்கு ஏற்கனவே தெரியும். இதையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றித்தராது. அனைத்து கார்களிலும் இந்த லோகோ நிச்சயம் இடம் பெறும்.

எச்சரிக்கை அறிவிப்புகள்: ரோல்ஸ்ராய்ஸ் காரின் சன் ஷேடு மற்றும் சைடு மிரர் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டிக்கும். எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த வாசகங்கள் பொறிக்கப்படாத ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கவே முடியாது. அது அரசின் கட்டாய விதிமுறையில் இருப்பதால் அதை அகற்றிவிட்டு காரை விற்பனை செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் முடியாது.
இன்ஜின்: ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கிய 6.7 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்படுகிறது. வாடிக்கையாளர் இந்த இன்ஜினில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி கஸ்டமைஸ் செய்ய முடியாது. இதற்குப் பதிலாக வேறு இன்ஜினை பொருத்தித் தரவும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அனுமதிக்காது. ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அதன் வெளிப்புற அம்சங்கள் மற்றும் கோபின் விஷயங்களில் மட்டுமே கஸ்டமைஸ்டு ஆப்ஷன்களை வழங்குகிறது.

கதவுகள்: ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் மற்ற கார்களை போல 4 கதவுகள் தான் இருக்கிறது. அதில் முன்பக்கம் உள்ள கதவு வழக்கம் போலத் தான் திறக்கும். ஆனால் பின்பக்கம் உள்ள கதவுகள் வழக்கமாக காரில் திறப்பதைப் போல இல்லாமல் உல்டாவாக மாற்றித் திறக்கும். இந்த முறையை ரோல்ஸ் ராய் நிறுவனம் எக்காரணத்தைக்கொண்டும் மாற்றாது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அடையாளமாக மாறிப் போனதால் இதை அந்நிறுவனம் எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாது.
இது தவிர வேறு எந்த மாற்றங்களை நீங்கள் பணம் கொடுத்துச் செய்ய விரும்பினாலும் செய்யலாம். ரோல்ஸ் ராய்ஸ் காரில் முழுவதும் வைரக் கற்கள் பதிக்க வேண்டும், அல்லது அதிக விலை கொண்ட வைரத்தை உடைத்து பெயிண்ட் உடன் கலந்து காரில் பூச வேண்டும் இப்படியாக எந்த விதமான கஸ்டமைசேஷன் சொன்னாலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தால் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்ராய்ஸ் என்னதான் இந்த கஸ்டமைஸ்னு கார்களை உருவாக்கினாலும் இப்படியாக சில விஷயங்களை எக்காரணத்தைக்கொண்டு மாற்றக்கூடாது என விதியை வைத்திருக்கிறது. இது எல்லாம் அந்நிறுவனத்தின் அடையாளம். இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒரு அடையாளம் என்பது விலை மதிப்பற்றது. அதை எவ்வளவு காசு கொடுத்தாலும் நம்மால் வாங்க முடியாது. இதற்குப் பின்னால் கடும் உழைப்பும், முயற்சியும் மட்டுமே தேவை என்பதை நாம் வாழ்விலும் புரிந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









