சென்னையில் இப்படி ஒரு சொகுசு காரை பிஎம்டபிள்யூ தயாரிக்குதா! 5.4 செகண்டுல மணிக்கு 100கிமீ வேகத்தை தொட்டிரும்!!
முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ சூப்பரான செயல் திறன் கொண்ட கார் மாடலை இந்திய லக்சூரி கார் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலைக் காணலாம், வாங்க.
இந்தியாவில் சொகுசு கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ-வும் ஒன்று. இந்த நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்5 இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக சொகுசு கார் மாடல் ஆகும். இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அறிமுகமாக இந்த லக்சூரி காருக்கு ரூ. 93.9 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்ரோடில் இதன் விலை கோடியைத் தாண்டும். அதேவேளையில், இந்த மாடலின் உயர்நிலை வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 1.06 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
புதிதாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கும் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கு வைத்து தயாரிக்கப்பட்ட காரணத்தினாலேயே சற்று குறைவான விலையில் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்5 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது இம்போர்ட் செய்யப்பட்டு இருந்தால் தற்போது இருப்பதைப்போலவே இன்னொரு மடங்கு அதிக விலையைக் கொண்டதாக இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கும்.

பெட்ரோல் மோட்டாரில் இரு விதமான தேர்வுகளிலும், டீசல் மோட்டாரில் இரு தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டிலும் எக்ஸ்-லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என்கிற தேர்வுகளே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் தேர்வில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 381 எச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். மேலும், இதனால் வெறும் 5.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதேபோல், இதன் டீசல் மோட்டாரும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

ஆனால், அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 6.1 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். 3.0 லிட்டர், 6 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 286 எச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த இரு மோட்டார் தேர்வுகளிலும் 48வோல்ட் எலெட்க்ட்ரிக் மோட்டார் ஹைபிரிட் தொழில்நுட்பமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 12 எச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்தகைய சிறப்பான மோட்டார் தேர்வுகளுடனேயே அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்5 சொகுசு கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதில், அப்டேட்டின்கீழ் எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், வளைவான தோற்றம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனை ஒரே திரைபோல வழங்கி இருப்பதே அதோடைய ஸ்பெஷல் ஆகும். இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஹர்மன் கர்டோன் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஆம்பியன்ட் லைட் பார் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், வென்டிலேட் மற்றும் எலெக்ட்ரிக் கன்ட்ரோல் வசதிக் கொண்ட இருக்கைகள் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வசதிகள் ஓட்டுநருக்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக லக்சூரி டிரைவ் அனுபவத்தை அவை வழங்கும்.
4 ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்டன்ஸ், சரவுண்ட் வியூ கேமிரா, டிரைவ் ரெக்கார்டு மற்றும் ரிமோட் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த காரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதனாலேயே சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை சற்று அடக்கமான விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக உள்ளூரிலேயே வைத்து தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றன. அவ்வாறே எக்ஸ்5 உற்பத்தியும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









