மாணவர்கள் உருவாக்கிய இந்த காரு கண்ண மூடி திறப்பதற்குள் 100கிமீ வேகத்த தொட்டுடும்! ஃபெர்ராரியே மிரண்டு நிக்குது

உலக நாடுகள் அனைத்தையும் ஒரு மாணவன் தற்போது திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார் என்றே கூறலாம். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிக்கு நூறு கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதி வேக எலெக்ட்ரிக் காரை வடிவமைத்து அசத்தி இருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக நாடுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த கார் தயாரிப்பு நிறுவனங்களையும் தங்களைப் பற்றிய பேச வைத்திருக்கின்றது ஓர் மாணவர்கள் குழு. காரணம் அவர்கள் உருவாக்கிய எலெக்ட்ரிக் கார்தான். அவர் வடிவமைத்திருக்கும் எலெக்ட்ரிக் காரானது ஒரு செகண்டுக்கும் குறைவான நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது.

This tiny e car can touch 1-100 kmph less than 1 second

இந்த ஒற்றை திறனே அனைவரையும் மாணவர்களைப் பற்றி பேச செய்திருக்கின்றது. ஏனெனில், உலக புகழ்பெற்ற சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனங்களான புகாட்டி மற்றும் ஃபெர்ராரி போன்ற நிறுவனங்களின் சூப்பர் கார்கள்கூட இந்த வேகத்தை எட்ட, அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை தொடுவதற்கு 2 செகண்டுகளுக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே மாணவர்கள் குழு தங்களுடைய தனி திறமையால் உலகின் அதிவேக மின்சார காரை உருவாக்கி அசர செய்திருக்கின்றார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இந்த காரை உருவாக்கியவர் ஆவார். இவர் உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் காரானது வெறும் 0.956 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இது திகைக்கச் செய்யும் திறன் ஆகும். கண்ணை மூடி திறப்பதற்குள் இந்த கார் 100 கிமீ சிட்டாக பறந்துவிடும். இந்த எலெக்ட்ரிக் காரை உலகின் அதிக வேக புரோட்டோடைப் வாகனமாக கின்னஸ் புத்தகமும் அங்கீகரித்து இருக்கின்றது. சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள புறநகர் பகுதியான டுபென்டோர்ஃப்-இல் வைத்து இந்த கார் அண்மையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

அப்போதே, இந்த சாதனை வெற்றி கரமாக செய்யப்பட்டது. இந்த காரின் உருவாக்கத்தில் ஒரு பெரிய மாணவர் பட்டாளமே ஈடுபட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் லூசர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாணவர்கள் அகாடமிக் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப் சூரிச் குழுவில் ஓர் அங்கமாகவும் இருக்கின்றனர்.

அவர்கள் உருவாக்கி இருக்கும் அதிவேக காருக்கு மைதென் என பெயர் வைத்திருக்கின்றனர். மிகவும் குட்டியான கோ கார்ட் ரக வாகனத்தை போலவே இந்த வாகனத்தை மாணவர்கள் குழு உருவாக்கி இருக்கின்றது. இது மின்சாரத்தில் மட்டுமே இயங்கும். ஒட்டுமொத்தமாகவே இதன் எடை 140 கிலோ மட்டுமே ஆகும்.

இதனை இலகு ரக கார்பன் மற்றும் அலுமினியத்தைக் கொண்டு உருவாக்கி இருக்கின்றனர். இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 326 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றனர். 30 மாணவர்கள் இணைந்து 12 மாத உழைப்பின்கீழ் இந்த காரை உருவாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

படிப்பையும் பார்த்துக் கொண்டும், உலகமே வியக்கும் அதிவேக எலெக்ட்ரிக் கார்களையும் அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்பது ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரி பேக் மற்றும் சேஸிஸ் என அனைத்தும் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டவை ஆகும்.

இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களையும் அவர்களே உருவாக்கியதன் காரணத்தினாலேயே இந்த அளவு அதிக நாட்கள் அதிவேக எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்திற்கு எடுத்திருக்கின்றது. இதற்கு முன்னதாக மின்சார வாகனங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து உலக சாதனைகளையும் இந்த மைதன் எலெக்ட்ரிக் கார் முறியடித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் அதிக வேகத்தில் ஓடும் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டு இருப்பது உலக சூப்பர் கார் விரும்பிகள் மத்தியில் இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது கட்டாயம் விற்பனைக்கு வரப்போவதில்லை என்பது தெரிந்தும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். இருப்பினும், ஏதேனும் ஓர் கார் உற்பத்தி நிறுவனம் மாணவர்களின் இந்த தயாரிப்பிற்கு டஃப் கொடுக்கக் கூடிய ஓர் மின்சார காரை விரைவில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 23:26 [IST]
English summary
This tiny e car can touch 0 100 kmph less than 1 second
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+