இந்த விண்டேஜ் காருல ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாதான் செலவாகும்.. பைக்கை வாங்குற விலையிலேயே இத வாங்கிடலாம்!

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து சாலைகளையும் மின்சார வாகனங்களே ஆள இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, சமீபத்திய ஆய்வின் முடிவுகளில் 2030 ஆம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான சந்தை 22 மில்லியனாக வளரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களுக்கான தேவையும் பல மடங்கு உலகெங்கிலும் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் மின்சார வாகனங்களுக்கான தேவையும், வரவேற்பும் பல மடங்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மின்சார வாகனமாக மாற்றப்பட்ட பழைய விண்டேஜ் வாகனம் ஒரு கிமீ பயணிக்க வெறும் 1 செலவாகும் என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விண்டேஜ் கார்

மேட் இன் பஞ்சாப் விண்டேஜ் கார்

இந்த விண்டேஜ் வாகனம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஓர் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாக எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. பொதுவாக மாடிஃபை செய்ய வாகனங்களின் சாலை பயன்பாட்டிற்கு தடை இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த வாகனம் மிக மிக குறைவான வேகத்தில் இயங்கக் கூடியது ஆகும். மிக குறைவான வேகம் என்பதால் இதை பதிவு செய்வது அவசியம் இல்லை.

சாலை பயன்பாட்டிற்கு உகந்தது

ஆகையால், சாலை பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இந்த விண்டேஜ் எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இத்தகைய வாகனங்களை பலர் தினசரி பயன்பாட்டிற்காக வாங்கிய வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் குறைவான வேகத்தில் இயங்கும் காரை பிரத்யேகமாக பஞ்சாபில் வாங்கி வந்திருக்கின்றார். தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார் மாடல் அவருக்கு பிடிக்காத காரணத்தினாலேயே இந்த விண்டேஜ் காரை அவர் தேடிப் பிடித்து வாங்கி இருக்கின்றார்.

அந்த விண்டேஜ் எலெக்ட்ரிக் காரையே நாம் வீடியோவில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதனை தினசரி பயன்பாட்டிற்காக அலெக்ஸ் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார். பஞ்சாபை மையமாகக் கொண்டு இயங்கும் ப்ளூட்டோ மோட்டார்ஸ் இடமிருந்தே அவர் வாங்கி இருக்கின்றார். இது குறைவான வேகத்தில் இயங்கும் மின்சார வாகனத்தை உருவாக்குவதில் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றது. வெவ்வேறு வாகனங்களில் இருந்து பெறப்பட்ட பாகங்களைக் கொண்டே ப்ளூட்டோ மோட்டார்ஸ் விண்டேஜ் வாகனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கின் வீல்

உதாரணமாக டயர் மற்றும் வீல்கள் ராயல் என்பீல்டு புல்லட்டுடையதாக இருக்கின்றது. இந்த விண்டேஜ் வாகனம் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இதேபோல், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீட்டராக இருக்கின்றது. ஐசிஇ மோட்டார் கொண்ட வாகனத்தைக் காட்டிலும் மிக மிக குறைவான செலவே இது வழங்கும். முன்னதாக கூறியதைப் போல் ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாய் மட்டுமே ஆகும்.

விண்டேஜ் கார்

விலை இவ்ளோ கம்மியா!!

இந்த விண்டேஜ் எலெக்ட்ரிக் காரில் அதன் உரிமையாளர் ஹேண்ட் பிரேக்கையும், அதனை டெயில் லைட்டுடனும் இணைத்திருக்கின்றார். இதுபோன்று இன்னும் சில வசதிகளை எலெக்ட்ரிக் காரில் தனக்காக அவர் சேர்த்து இருக்கின்றார். விண்டேஜ் எலெக்ட்ரிக் காரை அவர் ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் நம்ப முடியாததாக இருக்கின்றது. எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்துகொள்ள ப்ளூட்டோ மோட்டார்ஸ் இன்வெர்டர் வசதி உடன் வழங்குகின்றது.

உயரமான மலை பகுதியில் ஏறுவது கொஞ்சம் சிக்கல்

காருக்கான பேட்டரிகள் வாகனத்தின் முன் பக்கத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த வாகனம் சில சிக்கல்களைக் கொண்டதாக இருக்கின்றது. இது ஓர் குறைவான இயங்கும் திறன் கொண்ட வாகனம் என்பதால் உயரமான மலை பகுதியில் ஏறும்போது அது தடுமாறுவதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த வாகனத்தை பயன்படுத்தியதற்காக இரண்டு முறை அவர் போலீஸார்கள் சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றனர். இது ஓர் குறைந்த வேகம் திறன் கொண்ட கார் என்பதை உணர்ந்த பின்னரே, காவலர்கள் வாகனத்தை விடுவித்திருக்கின்றனர்.

ஏசி இல்லாதது பெரும் குறையா இருக்கு

இந்த எலெக்ட்ரிக் காரில் ஏசி வழங்கப்படவில்லை. அதேவேளையில், நான்கு பேர் வரை இந்த எலெக்ட்ரிக் காரில் சௌகரியமாக பயணிக்க முடியும். நகர்புற பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்த வாகனமாக இது இருக்கின்றது. இதனை எங்கு வேண்டுமானாலும் சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. பஞ்சாப் தயாரிப்பு என்பதால் பஞ்சாபிற்குதான் இதை சர்வீஸ் செய்ய எடுத்து செல்ல வேண்டும் என்று இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, February 4, 2023, 11:01 [IST]
English summary
This vintage car costs just rs 1 per km
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+