நிறைய பொருட்களை ஏத்திட்டு போறதுக்காக ட்வின் சிலிண்டர் செட்-அப்பில் டியாகோ, டிகோர் அறிமுகம்! விலை எவ்ளோ!

அதிக லக்கேஜ்களை ஏற்றி செல்வதற்கு ஏதுவாக ட்வின் சிலிண்டர் (Twin Cylinder) செட்-அப்பை டாடா மோட்டார்ஸ் (Tata Motor) அதன் புகழ்பெற்ற இரு சிஎன்ஜி (CNG) கார்களில் அறிமுகம் செய்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே டாடா மோட்டார்ஸ் (Tata Motor), சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான பஞ்ச் (Punch)-இல் சிஎன்ஜி தேர்வை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

Tata tiago tigor icng updated with twin cylinder

இதற்கு அறிமுக விலையாக ரூ. 7.1 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் அதன் புகழ்பெற்ற சிஎன்ஜி கார் மாடல்களான டியாகோ, டிகோர் ஆகிய இரண்டிலும் ட்வின் சிலிண்டர் செட்-அப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்யதிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக பூட்-ஸ்பேஸை உறுதி செய்யும் விதமாக இந்த அம்சத்துடன் இரு கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. டாடா டியாகோ ஐசிஎன்ஜி ரூ. 6.55 லட்சம் தொடங்கி ரூ. 8.10 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இதேபோல், டியாகோ ஐ-சிஎன்ஜி ரூ. 7.10 லட்சம் தொடங்கி ரூ. 8.95 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இதே ட்வின் சிலிண்டர் செட்-அப் உடனேயே புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் பஞ்சிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இந்த அம்சத்தை முதன் முதலில் அல்ட்ராஸிலேயே டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக பூட்-ஸ்பேஸ் கொண்ட சிஎன்ஜி வசதிக் கொண்ட காரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இரு சிலிண்டர்களிலும் சேர்த்து 70 லிட்டர் வரையில் வாயுவை நிரப்பிக் கொள்ள முடியும்.

ஆனால், மற்ற நிறுவனங்களின் சிஎன்ஜி கார்களில் ஒரே ஒரு சிலிண்டர் மட்டுமே இருக்கும். அதில், 60 கிலோ வரையில் சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள முடியும். ஒற்றை சிலிண்டராகவும், சற்று பெரியதாகவும் இது இருக்கின்ற காரணத்தினால் பூட் ஸ்பேஸை பெருமளில் அது குடித்துவிடுகின்றது.

இந்த நிலையைக் காரணம் காட்டியே டாடா மோட்டார்ஸ் இரட்டை சிலிண்டர் செட்-அப்பை தன்னுடைய சிஎன்ஜி கார்களில் அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டு சிலிண்டர்களுக்கும் பூட் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கும். இவை இரண்டும் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால், ஸ்பேர் வீல் அடிப்பகுதியில் இருக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டிலும் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 76 பிஎச்பி மற்றும் 97 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த கார்கள், இந்தியாவில் சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ, மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஹூண்டாய் அவுரா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றன. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் அதன் சிஎன்ஜி கார்களை பிரைவேட் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

வணிக சேவைக்காக பயன்படுத்துவோருக்கு அது விற்பனைக்கு வழங்கப்படுவதில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ரெட்டை சிலிண்டர் செட்-அப் கொண்ட சிஎன்ஜி காரின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என கூறப்பபடுகின்றது. ஆனால், துள்ளியமான தேதி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சிஎன்ஜி கார் பிரியர்களைக் கவரும் விதமாக டாடா மோட்டார்ஸ் ட்வின் சிலிண்டர் செட்-அப்பில் புதிதாக பஞ்ச் காரையும், டியாகோ மற்றும் டிகோர் கார்களை ட்வின் சிலிண்டருக்கு அப்கிரேட் செய்தும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 4, 2023, 16:30 [IST]
English summary
Tiago tigor icng got twin cylinder set up here more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+