உங்க காரால இந்தளவுக்கு பாதுகாப்பு தரமுடியுமா? லாரி ரூபத்தில் வந்த எமனுக்கு தன்னுடைய ஸ்டைலில் டாடா காட்டிய கார்

கார் ஒன்று மிக மோசமான விபத்தைச் சந்தித்து இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த வீடியோ விபத்தைச் சந்தித்த காரை ஓட்டி ஓட்டுநர் எடுத்தது ஆகும். இவ்வளவு மோசமான விபத்தில் இருந்து அவர் எப்படி தப்பினார்?, அவர் ஓட்டி வந்த காரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா டியாகோ, இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரே மிக மோசமான விபத்தைச் சந்தித்தபோதிலும் தன்னுடைய பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கி இருக்கின்றது. இந்த சம்பவத்தின் வாயிலாக தான் ஓர் மலிவு விலைக் கார் மட்டும் அல்ல, அதிக பாதுகாப்பு திறன்மிக்க ஓர் டாடா தயாரிப்பு என்பதை அது உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Tata tiago crashes into a dumper truck

டம்பர் டிரக் எனப்படும் மிக பெரிய உருவம் கொண்ட லாரி உடனேயே டாடா டியாகோ விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இதுபோன்ற வாகனங்களில் சிக்கும் சிறிய வாகனங்கள் இதுவரை தப்பியதாக வரலாறே இல்லை. ஓரு குண்டு ஊசி தப்புவதும் பெரிய விஷயம் ஆகும்.

இத்தகைய ஓர் வாகனத்துடனான மோதலுக்கு பின்னரும் டயாகோ தன்னுள் பயணித்த பயணிகள் அனைவருக்கும் பாதுகாத்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது. அது ஓர் இரும்பு அரணாக இருந்து அது காப்பாற்றி இருக்கின்றது என்றே கூறலாம். சாதாரணமாக ஒரு சிறிய டம்பர் டிரக்கே 6.5 டன்கள் தொடங்கி 7.5 டன்கள் வரை மட்டுமே எடைக் கொண்டதாக இருக்கும்.

இந்த விபத்து சம்பவத்தின்போது 14 டன் கொண்ட பெரிய டம்பர் டிரக்கே டியாகோவை மோதியாதகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இதன் அதிகப்படியான தாக்கத்தைத் தாக்குப்பிடித்து தன்னுடைய உறுதித் தன்மை டியாகோ வெளிக்காட்டி இருக்கின்றது. பயணிகளை மட்டுமின்றி காருக்குள் இருந்த செல்லப் பிராணிக்கும் அது அபரீதமான பாதுகாப்பை வழங்கி இருக்கின்றது.

ஆமாங்க இந்த மோசமான விபத்து நடைபெற்றபோது டாடா டியாகோ காரில் ஓர் நாய் பயணித்திருக்கின்றது. இந்த நாயும் தற்போது பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. அசாம் மாநிலத்திலேயே இந்த மோசமான விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. விபத்தினால் டாடா டியாகோ மீண்டும் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற காராக மாறி இருக்கின்றது.

அது தன்னுயிரை நீர்த்து பயணிகளை காத்திருக்கின்றது. நாய்க்கு தடுப்பூசி போட மருத்துவமனைச் சென்றபோதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மேலும், விந்த விபத்து சம்பவத்திற்கும் அதி வேகமே காரணமாக அமைந்திருக்கின்றது. டியாகோ இயக்கிய ஓட்டுநர் அதிக வேகத்தில் காரை ஓட்டி இருக்கின்றார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக டம்பர் டிரக் குறுக்கே வரவே கட்டுப்படுத்த முடியாமல் காரும், டம்பர் டிரக்கும் மோதி இருக்கின்றது. மோதலில் இருந்து தப்பிக்கும் விதமாக சில முயற்சிகளை மேற்கொண்டபோதும் விபத்து தவிர்க்கப்படவில்லை. இறுதியாக மிக மோசமான விபத்தை அந்த கார் சந்தித்தது.

இது உண்மையிலேயே மிக மோசமான விபத்தாகும். காரின் ரூஃப், பில்லர் மற்றும் விண்ட் ஸ்கிரீன் என அனைத்தும் முழுமையாக சேதமடைந்திருக்கின்றது. இத்தகைய விபத்தில் இருந்து காரில் இருந்தவர்களும், நாயும் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கு டாடா டியாகோவின் அதிக உறுதியான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ ஓர் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். குட்டியான ஹேட்ச்பேக் காராக இது இருந்தாலும் பாதுகாப்பு வசதிகளை மிக தாராளமாக இக்கார் மாடலில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே குளோபல் என்சிஏபி இந்த காருக்கு ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 15:09 [IST]
English summary
Tiago truck met accident here is unexpected result
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+