முதலிடம் என்னவோ மாருதி தான்! ஆனா பேச்செல்லாம் டொயோட்டா பத்தி தான் ஏன் தெரியுமா?

மார்ச் மாதம் பிறந்துவிட்டது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் கடந்த பிப்ரவரி மாத விற்பனை நிலவரங்களை வெளியிட்டு விட்டன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை வைத்து டாப் 10 பட்டியல் நமக்குக் கிடைத்துவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் மொத்தம் 2,82,799 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாத எண்ணிக்கையாக 2,50,146 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 13.05 சதவீதம் அதிகமாகும் இதுவே. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 3,35,644 கார்கள் விற்பனையாகியிருந்தது அதை ஒப்பிடும் போது 15.74 சதவீதம் அதிகம் ஆகும். இதில் டாப் 10 இடங்களில் பிடித்த நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.

முதலிடம் என்னவோ மாருதி தான்! ஆனா பேச்செல்லாம் டொயோட்டா பத்தி தான் ஏன் தெரியுமா?

1. மாருதி - Maruti

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 1,18,892 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவி மாத விற்பனையான 1,09,611 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 8.47 சதவீதம் அதிகம் இதுவே கடந்த ஜனவரி விற்பனை எண்ணிக்கையான 1,50,046 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 20.76 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.

2. ஹூண்டாய் - Hyundai

ஹூண்டாய் நிறுவனம் ஒரு வழியாக இந்த முறை இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது. கடந்த மாதம் மொத்த 39,106 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையை ஒப்பிடும் போது 1.08 சதவீதம் விற்பனை அதிகம் அதுவே கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 14.61 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.

3. டாடா மோட்டார்ஸ் - Tata Motors

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 2ம் இடத்தை ஜஸ்ட் மிஸ் செய்துவிட்டது. பிப்ரவரி மாதம் மட்டும் 38,965 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிட்டால் 14.42 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 13.53 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

4. மஹிந்திரா - Mahindra

மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 29,356 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 60.73 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 12.91 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

5. கியா - Kia

கியா நிறுவனத்திற்குக் கடந்த பிப்ரவரி மாதம் அதிர்ஷ்ட காலம் தான். மொத்தம் 19,554 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையை ஒப்பிடும் போது மொத்தம் 43.55 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 1.33 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

6. டொயோட்டா - Toyota

டொயோட்டா காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் அடை மழை தான். மொத்தம் 12,068 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 50.49 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 10.30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

7. ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் - Skoda -Volkswagen

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ஸ்கேடாவுடன் இணைந்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 6,711 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 24.51 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. கடந்த ஜனவரி விற்பனையுடன் ஒப்பிட்டால் 20.84 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

8. ஹோண்டா - honda

ஹோண்டா நிறுவனத்திற்குக் கடந்த பிப்ரவரி மாதம் கஷ்டகாலம் தான். இந்நிறுவனம் மொத்தம் 5,744 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையை ஒப்பிடும் போது 30.66 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிடும் போது 22.46 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

9. ரெனால்ட் - Renault

ரெனல்ட் நிறுவனத்திற்கும் கடந்த பிப்ரவரி மாதம் மோசமான மாதமாக அமைந்துள்ளது. மொத்தமே 4,916 கார்களை தான் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 23.01 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 32.62 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

10. எம்ஜி - MG

எம்ஜி நிறுவனத்திற்குக் கடந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் தான். மொத்தம் 3604 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விற்பனையை ஒப்பிட்டால் 1.01 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 9.91 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தான் ஆண்டின் மிகச் சிறிய மாதம் என்பதால் எப்பொழுதும் ஜனவரி மாத விற்பனையை விடப் பிப்ரவரியில் சரிவு அதிகமாக இருக்கும். மேலும் பிப்ரவரி மாதம் பண்டிகைகள் எல்லாம் முடிந்தவுடன் வரும் மாதம் என்பதால் விற்பனையும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. அப்படியிருந்தும், கியா, டொயோட்டா, எம்ஜி ஆகிய நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

ஹோண்டா, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மாருதி, டாடா போன்ற நிறுவனங்களே காட்டாத வளர்ச்சியை கியா, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் காட்டுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 16:00 [IST]
English summary
Top 10 car brands in feb 2023 sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+