2023-ல் அறிமுகமான டாப் 10 கார்கள் இது தான்! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?
2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில ஆண்டு நாட்களில் நிறைவடையும் சூழ்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் ஏகப்பட்ட புதிய கார்கள் அறிமுகமாகியுள்ளன. இது ஆட்டோமொபைல் துறையே புரட்டி போடும் அளவிற்கு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் புதிய ஸ்டைல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் நிறைந்த காராக இருக்கின்றன. இப்படியாக 2023 ம் ஆண்டு வெளியான டாப் 10 கார்களை பற்றி இங்கே காணலாம்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்ஃலிப்ட்: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரின் ஃபேஸ்ஃலிப்டை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். இந்த கார் புதிய லுக் மற்றும் புதிய உட்புற கட்டமைப்புடன் அப்டேட் செய்யப்பட்ட காராக இந்த ஆண்டு அறிமுகமானது. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி காராக இருக்கிறது பழைய மாடலை போல இதிலும் பல இன்ஜின் ஆப்ஷன்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன.

மாருதி ஃபிராங்க்ஸ்: 2023 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ் போவில் முதன்முதலாக இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது முதலே இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. இந்த கார் அறிமுகமானது முதல் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. வெறும் ஏழு மாதங்களில் 75 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளன.
பட்ஜெட் குறைவாகவும் ஸ்டைலாகவும் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி கார் என்பதால் குடும்பத்துடன் காரில் பயணிக்க விரும்புபவர்கள் இந்த காரை விரும்பி தேர்வு செய்கின்றனர். இதன் லுக்கும் சரி பெர்ஃபார்மென்ஸூம் சரி கொடுக்கும் காசுக்கு வொர்த்தாக இருக்கிறது. இதனால் மக்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

மாருதி ஜிம்னி: மாருதி ரசிகர் பலர் இந்த காருக்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த காரின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் பலர் யோசித்தனர். இருந்தாலும் இந்த காரின் டிசைன் மற்றும் இதன் பெர்ஃபார்மன்ஸ் ஆகியன அட்வெஞ்ச்சர் விரும்பிகளுக்கு ஏற்றவாறு இருந்ததால் இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது.
ஹூண்டாய் அயானிக் 5: ஹுண்டாய் நிறுவனத்தின் அதிக விலை கொண்ட இவி காராக இந்த அயானிக் 5 கார் இருக்கிறது. இது புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் ஒரு சான்றாக இருக்கிறது. ரெட்ரோ வடிவ டிசைன் கொண்ட இந்த கார் சிறப்பான பெர்ஃபார்மன்ஸையும் வெளிப்படுத்தும் இந்த காரின் விலை சற்று அதிகமாக இருப்பதால் விற்பனை எண்ணிக்கை சற்று குறைவுதான். ஆனால் இந்த காரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

புதிய ஹுண்டாய் வெர்னா: ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்ட புதிய வெர்னா கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்று மிக முக்கியமான மைல்களை எட்டி உள்ளது. இதில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் இன்ஜின், இதன் டிசைன், பாதுகாப்பு மற்றும் ஸ்டைல் ஆகிய இந்த காருக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர்: யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மிகச் சரியாக திட்டமிடப்பட்டு இந்த சீரியலாக எஸ்யூவி காராக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டிலேயே உள்ள பல அம்சங்கள் முதன்முறையாக பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக சன்ரூஃப், டேஷ் கேமரா உள்ளிட்டன இந்த செக்மெண்டில் பொருத்தப்பட்ட முதல் கார் இதுதான். இந்த காருக்கு இந்த காரின் விலை மிக குறைவாக இருப்பதால் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்: சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் அதன் லுக்கிற்காகவே சிறப்பான பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த காரில் பெரிய அளவில் அம்சங்கள் இல்லை என்றாலும் இதன் லுக்கிற்காகவே பலர் இருந்த காரை வாங்குகிறார்கள். இதன் வெளிப்புறத் தோற்றம் காண்பவர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கிறது. உட்புறத்திலும் பிராக்டிக்கலான இன்டிரியர்கள், இரண்டு சீட்டிங் செட் அப் உள்ளிட்டன இந்த காருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.
ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனம் மிட் சைஸ்மெண்டில் எலவேட் என்ற காரை அறிமுகப்படுத்தி மீண்டும் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் ஐவி டெக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிசைன் மற்றும் இதில் உள்ள அடாஸ்தொழில்நுட்பம் ஆகிய மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள மற்ற எஸ்யூவி கார்களுக்கு நிச்சயம் போட்டி தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: இன்னோவா காரை அப்டேட் செய்து டொயோட்டோ நிறுவனம் ஹைகிளாஸ் என்ற பெயரில் புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்தியது. இது ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது. டிஎன்ஜிஏ-சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட இந்த கார் சிறப்பான மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரின் விற்பனை யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
எம்ஜி கோமெட் இவி: எம்ஜி நிறுவனம் வெளிநாட்டில் தனது துணை நிறுவனமான வூலிங் நிறுவனத்தின் ஏர் இவி காரை இந்தியாவில் கோமெட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வித்தியாசமான டிசைனால் மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களை காட்டிலும் இந்த கார் தனித்துவமாக தெரிகிறது. இதன் சிறப்பான குவாலிட்டி மற்றும் விலை காரணமாக இந்த கார் மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஏகப்பட்ட கார்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும் மேலே உள்ள பத்து கார்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று மக்கள் கவனத்தை ஈர்த்த கார்களாக உள்ளன. இந்த கார்கள் நிச்சயம் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டையை புரட்டி போட்டு விட்டது என்று சொல்லலாம். அடுத்த ஆண்டும் இதே போல பல புதிய கார்களை நாம் எதிர்பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









