ஒரிஜினல் டான் யாருன்னு நிரூபித்த மாருதி! டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை எல்லாம் தண்ணி குடிக்க வெச்சுட்டாங்க!

இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல, மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. 10ல் 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் டாடா (Tata) நிறுவனம் 2 இடங்களையும், ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. வேறு எந்த நிறுவனங்களுக்கும் இந்த பட்டியலில் இடம் இல்லை. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) முதலிடத்தை பிடித்துள்ளது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14,458 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16,932 ஆக உயர்ந்துள்ளது. இது 17 சதவீத வளர்ச்சியாகும்.

ஒரிஜினல் டான் யாருன்னு நிரூபித்த மாருதி! டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை எல்லாம் தண்ணி குடிக்க வெச்சுட்டாங்க!

எம்பிவி ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,840 ஆக இருந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,273 ஆக உயர்ந்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சியாகும். ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காருக்கு, இந்த பட்டியலில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,661 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,061 ஆக குறைந்துள்ளது. இது 23 சதவீத சரிவாகும்.

டாடாவின் பாதுகாப்பான கார்!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய முதல் 'மேட் இன் இந்தியா' காரான டாடா நெக்ஸான் (Tata Nexon), இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,899 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,053 ஆக சரிந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும். அத்துடன் நூலிழையில் (8 கார்கள் வித்தியாசம்) மூன்றாவது இடத்தை டாடா நெக்ஸான் தவற விட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரிஜினல் டான் யாருன்னு நிரூபித்த மாருதி! டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை எல்லாம் தண்ணி குடிக்க வெச்சுட்டாங்க!

மீண்டும் மாருதி!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,633 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,997 ஆக உயர்ந்துள்ளது. இது 13 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9,531 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,200 ஆக உயர்ந்துள்ளது. இது 18 சதவீத வளர்ச்சியாகும்.

இரண்டாவது டாடா கார்!

இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) கார் ஏழாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8,008 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,586 ஆக உயர்ந்துள்ளது. இது 32 சதவீத வளர்ச்சியாகும். டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், விரைவில் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) காட்சிக்கு வைக்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதி வேகன் ஆர் காருக்கு பலத்த அடி!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9,165 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,581 ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீத வளர்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலின் பத்தாவது மற்றும் கடைசி இடத்தில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19,728 ஆக இருந்த வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,181 ஆக குறைந்துள்ளது. இது 48 சதவீத வீழ்ச்சியாகும்.

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு!

இந்த பட்டியலில் 9வது இடத்தை நீங்கள் தேடுவது புரிகிறது. அந்த இடத்தை பிடித்திருப்பது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7,609 ஆக இருந்த ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,205 ஆக உயர்ந்துள்ளது. இது 34 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு பிறகு, இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2023, 19:13 [IST]
English summary
Top 10 cars december 2022 maruti suzuki baleno lead sales chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+