இந்த வருஷமே கார் வாங்குனா ரூ11 லட்சம் வரை மிச்சம் பண்ணலாம்! எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி தெரியுமா?

2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கான விலையை மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் அதிக எண்ணிக்கையில் விற்பனையை காட்ட வேண்டும் என்பதற்காக அதிக தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். இந்தியாவில் அதிக தள்ளுபடியில் விற்பனையாகும் கார்களை காணலாம் வாருங்கள்.

ஜீப் கிராண்ட் செரோக்கி: ஜீப் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் சொகுசு எஸ்யூவி காரான இந்த காருக்கு ரூபாய் 12 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. குறைந்த விலையில் சொகுசான காரை விரும்புபவர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. ரூபாய் 12 லட்சம் என்பது மிகப் பெரிய அளவிலான தள்ளுபடி ஆகும்.

Top 10 Cars December Discounts

ஃபோக்ஸ்வேகன் டைகுவான்: ஸ்போக்ஸ்வாக நிறுவனம் தனது டைகுவான் காருக்கு ரூபாய் 4.2 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் தள்ளுபடி ரூ.75,000 எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூ 75,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சமும் என மொத்தம் 2.5 லட்சம் இதுபோக ரூபாய் 84,000 மதிப்பிலான நான்கு ஆண்டுகளுக்கான சர்வீஸ் வேல்யூ பேக்கையும் வழங்குகிறது. இதுபோக சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. இதன் மொத்த மதிப்பு 4.2 லட்சம் ஆகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400: மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 400 காருக்கு ரூபாய் 4.2 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்கி உள்ளது. அதன்படி கேஷ் தள்ளுபடி ரூ 4 லட்சமும் எக்சேஞ்ச் போனதாக ரூபாய் 20,000 என மொத்தம் ரூபாய் 4.20 லட்சம் வரை இந்த கார்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Top 10 Cars December Discounts

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்: எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஹூண்டாய் கோனா நிறுவனம் மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளை வழங்கி உள்ளது. அதன்படி இந்த காருக்கு ரூ3லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது நேரடியாக கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் இந்த காரை தற்போது வாங்குபவர்கள் ரூ3லட்சம் குறைவான விலையில் வாங்க முடியும். இதுபோக வேறு எந்த ஆஃபரும் காருக்கு வழங்கப்படவில்லை. ரூ3 லட்சம் தள்ளுபடிக்கு மேல் வேறு என்ன தான் வேண்டும்.

ஜீப் மெரிடியன்: ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் கார் ஒரே நேரத்தில் சொகுசு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காருக்கு ரூபாய் 2.45 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரூபாய் 2 லட்சம் நேரடியாக கேஸ் தள்ளுபடி ஆகவும், ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூபாய் 25000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Top 10 Cars December Discounts

மாருதி ஜிம்னி: இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆஃப் ரோடு எஸ்யூவி காராகும். இந்த காருக்கு சிறப்பான வகையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1.16 லட்சம் வரை நேரடியாக வாடிக்கையாளர் தள்ளுபடியாகவும் ரூபாய் 5000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் இந்த காருக்கு மொத்தம் 2.21 லட்சம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன்: வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் ஸ்டைலாகவும், கிளாஸாகவும் வடிவமைக்கப்பட்ட காராகும். இந்த காருக்கு பல்வேறு விதமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேஸ் தள்ளுபடியாக ரூபாய் 1 லட்சமும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூபாய் 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி 20,000, கூடுதல் சிறப்பு சலுகையாக ரூபாய் 35000 என மொத்தம் ரூபாய் 1.91 லட்சம் மதிப்பிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Top 10 Cars December Discounts

ஜீப் காம்பஸ்: ஜீப் நிறுவனத்தின் ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி காராக இந்த ஜீப் காம்பஸ் கார் இருக்கிறது. இந்த காருக்கு 1.65 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இவை 1.5 லட்சம் கேஷ் தள்ளுபடியாகவும் ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பட்டியலிலேயே அட்ராக்டிவான மக்களை ஈர்க்கும் கார்களில் ஒன்றாக இது இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300: மஹிந்திரா நிறுவனம் விரைவில் தனது எக்ஸ்யூவி 300 காரை அப்டேட் செய்யப்போகிறது. அதனால் இந்த காருக்கு தற்போது 1.72 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் தள்ளுபடியாக 1.43 லட்சமும், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 25000, கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 4000 தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Top 10 Cars December Discounts

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது காருக்கு ரூபாய் 1.67 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் தள்ளுபடியாக ரூ 1 லட்சம் கேஷ் தள்ளுபடியாகவும், ரூபாய் 20,000 எக்ஸ்சேஞ்ச் போனதாகவும் ரூபாய் 17,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகவும் கூடுதல் சிறப்பு சலுகைகளாக ரூபாய் 30,000 என இந்த செடான் காருக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிசம்பர் மாதம் என்பது வாகன விற்பனையை அதிகப்படுத்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏகப்பட்ட கார்களை சிறப்பான தள்ளுபடிகள் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் முதல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புக்கான விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஒரு காரை நீங்கள் இப்பொழுது வாங்கினால் ஏகப்பட்ட பணத்தை சேமிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 17:35 [IST]
English summary
Top 10 cars december discounts up to 11 85 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X