மாருதியை யாராலும் அசைக்க முடியாது போலயே! டாப் 10ல பாதிக்கு மேல அவங்க கார் தான் இருக்குது!

கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான கார்கள் குறித்த தரவுகள் எல்லாம் வந்து விட்டன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 3,91,472 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதில் அதிகம் விற்பனையான வாகனங்கள் எது என்ற டாப் 10 பட்டியலை இங்கே காணலாம் வாருங்கள்.

அக்டோபர் மாதம் விற்பனையான கார்களில் டாப் 10 பட்டியலில் 6 கார்கள் மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்கள் இருக்கிறது. 2 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் இருக்கிறது. இதுபோக ஒரு ஸ்கார்பியோ நிறுவனத்தின் காரும் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் ஒன்றும் இருக்கிறது. பெரும்பாலும் மாருதி சுஸூகி நிறுவனம் தான் டாப் 10 பட்டியலை ஆக்கிரமித்துள்ளது.

top 10 cars october 2023

இந்த டாப் 10 பட்டியலில் 50.7 சதவீதமான வாகனங்கள் எஸ்யூவி செக்மெண்டிலும், 29 சதவீதமான வாகனங்கள் ஹேட்ச்பேக் செக்மெண்டிலும் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 5 எஸ்யூவிகள் மூன்று ஹேட்ச் மற்றும் ஒரு செடான் மற்றும் ஒரு எம்பிவி ஆகிய கார்கள் இந்த பட்டியலில் உள்ளது. சரி இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு காராக காணலாம் வாருங்கள்.

வழக்கம் போல இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் தான். கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 22,080 கார்கள் விற்பனையாகி உள்ளன. அப்படியே இரண்டாவது இடத்திலும் மாருதி நிறுவனத்தின் கார்தான் இருக்கிறது. மொத்தம் 20,598 கார்களை விற்பனை செய்து மாருதி ஸ்விஃப்ட் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை டாடா நிறுவனம் பிடித்துள்ளது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் மொத்தம் 16,887 கார்கள் விற்பனையாகியுள்ளன.

top 10 cars october 2023

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மாருதி சுஸூகி பலேனோ கார் பிடித்துள்ளது. மொத்தம் 16,594 கார்கள் இந்த செக்மெண்டில் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் அடுத்த இடத்தை மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் பிடித்துள்ளது. இந்த கார் மொத்தம் 16,050 கார்கள் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை ஆகி உள்ளன.

இதற்கு அடுத்த இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 15,317கார்கள் விற்பனை ஆகியுள்ளன. அதைத் தொடர்ந்து மாருதி டிசையர் கார் இருக்கிறது. இந்த டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே செடான் கார் இதுதான். மொத்தம் 14,699கார்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக மாருதி எர்டிகா கார் இருக்கிறது. இந்த பாட்டிலில் இருக்கும் ஒரே எம்பிவி கார் இதுதான். இதை பொறுத்தவரை 14,209கார்கள் விற்பனையாகி உள்ளன.

top 10 cars october 2023

இந்த பட்டியலில் நமக்கு சர்ப்ரைஸ் ஆக இருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் மொத்தம் 13,578 கார்கள் கடந்த மாதம் விற்பனையாகியுள்ளன. இது ஹூண்டாய் கரெக்டா விற்பனையான 13,077 என்ற எண்ணிக்கையை தாண்டி விற்பனை ஆகி உள்ளது. பட்டியலில் கடைசியாக ஹூண்டாய் கிரெட்டா தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் வெளியாகும் டாப் 10பட்டியலில் மாருதி நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாருதி நிறுவனத்தில் தான் குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகி வருகிறது. இருந்தாலும் டாடா நிறுவனம் தொடர்ந்து தனது பஞ்ச் மற்றும் நெக்ஸான் காரின் விற்பனையை அதிகரித்து உள்ளதால் இந்த இரு கார்களும் எப்பொழுதும் பட்டியலில் இடம் பெற்று வருகின்றன.

Rank Models OCT'23
1 Maruti Suzuki WagonR 22,080
2 Maruti Suzuki Swift 20,598
3 Tata Nexon 16,887
4 Maruti Suzuki Baleno 16,594
5 Maruti Suzuki Brezza 16,050
6 Tata Punch 15,317
7 Maruti Suzuki Dzire 14,699
8 Maruti Suzuki Ertiga 14,209
9 Mahindra Scorpio 13,578
10 Hyundai Creta 13,077

இந்த முறை சர்ப்ரைஸாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த ஸ்கார்பியோ என்பது ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் என இரண்டு கார்களின் கூட்டு விற்பனை எண்ணிக்கை ஆகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கார் விரைவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அப்டேட் செய்ததும் இந்த காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் டாப் 10 பட்டியலில் எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. விரைவில் இந்த டாப் 10 பட்டியலில் முழுவதும் எஸ்யூவி கார்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2023, 18:15 [IST]
English summary
Top 10 cars sold in october 2023 detailed report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X