மாருதி சுஸுகி நிறுவனத்தை இந்த விஷயத்தில் அடிச்சிக்கவே முடியாது!! கடந்த அக்டோபரில் அதிகம் விற்பனை செய்யப்பட்டவை
இந்தியாவில் கடந்த 2023 அக்டோபார் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த டாப்-10 கார்களை அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. கடந்த அக்டோபர் மாத விற்பனையிலும் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட இந்தியாவின் டாப்-10 கார்களில் 6 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். மீதி 4 கார்களில் 2 டாடா நிறுவனத்துடையது, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுடையது தலா 1 ஆகும்.

இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில்Popular Articles: ஆப்பிள் கண்டுப்பிடிச்ச இந்த சாதனம் மட்டும் உங்க காரில் இருந்தால்...!! நம்ம ஊர் போலீஸாரும் இதை செய்யணும்! விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி சுஸுகியின் வேகன்ஆர் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 22,080 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 17,945 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் வேகன்ஆர் கார்களின் விற்பனை ஆனது 23.04%, அதாவது 2022 அக்டோபரை விட 4,135 வேகன்ஆர் கார்கள் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. வேகன்ஆருக்கு அடுத்து 2வது இடத்திலும் மாருதி சுஸுகியின் காரான ஸ்விஃப்ட் உள்ளது. ஸ்விஃப்ட்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 20,598 ஆகும். 2022 அக்டோபரில் வேகன்ஆருக்கு இணையாக 17,231 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த இரு மாருதி கார்களுக்கு அடுத்து 3வது இடத்தில் சிறிய இடைவெளி உடன் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் 16,887 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும்.
ஆனால், 2022 அக்டோபரில் வெறும் 13,767 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு டாப்-3 கார்களின் விற்பனை 2022 அக்டோபரை விட அதிகரித்துள்ள போதிலும், 4வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பலேனோவின் விற்பனை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2022 அக்டோபரில் 17,149 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், கடந்த 2023 அக்டோபரில் 16,594 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள பிரெஸ்ஸா கார்களின் விற்பனை ஆனது சுமார் 61.45% அதிகரித்துள்ளது. 2022 அக்டோபரில் வெறும் 9,941 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 16,050 பிரெஸ்ஸா கார்கள் விற்கப்பட்டு உள்ளன.
6வது இடத்தில் டாடா பஞ்ச் 15,317 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2022 அக்டோபரில் 10,982 பஞ்ச் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. 7வது மற்றும் 8வது இடங்களில் மாருதி சுஸுகி கார்களான டிசைர் மற்றும் எர்டிகா உள்ளிட்டவை முறையே 14,699 மற்றும் 14,209 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. இவற்றின் 2022 அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 12,321 மற்றும் 10,494 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ/ என் (13,578) மற்றும் ஹூண்டாய் கிரெட்டா (13,077) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் சில கார்கள் 20 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுவது சகஜம் தான். சில மாதங்களில் சில கார்கள் 25 ஆயிரம் யூனிட்கள் கூட விற்கப்பட்டுள்ளன. பொதுவாக, இந்த டாப்-10 கார்கள் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டவைகளாக இருக்கும். ஆனால், கடந்த மாத விற்பனையில் அனைத்து கார்களும் 13 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டவை ஆக உள்ளன.


Click it and Unblock the Notifications









