டாடா கார்களில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தில் இவ்வளவு வசதிகள் இருக்குதா? அடேங்கப்பா!

டாடா நிறுவனம் தனது நெக்ஸான், ஹாரியர், சஃபாரி ஆகிய கார்களுக்கு தற்போது அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சமான அடாஸ் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதன் போட்டி நிறுவனங்களான மஹிந்திரா, எம்ஜி மோட்டார், ஹூண்டாய், ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஃபிளாக் ஷிப் காருக்கு இந்த தொழிற்நுட்பத்தை பொருத்தியுள்ளதையடுத்து தற்போது டாடா நிறுவனமும் பொருத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டார்க் எடிசன் கார்களாக தனது சஃபாரி மற்றும் ஹாரியர் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்களில் தான் அடாஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் சிறப்பாக விற்பனையாகும் நெக்ஸான் காரின் ரெட் டார்க் எடிசன் கார் கூட அறிமுகமானது. ஆனால் அதில் அடாஸ் தொழிற்நுட்பம் இல்லை. இந்த பதிவில் ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தின் அம்சங்களைப் பற்றிக் காணலாம்.

டாடா கார்களில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தில் இவ்வளவு வசதிகள் இருக்குதா? அடேங்கப்பா!

1. ஃபார்வேர்டு கோலிஷன் வார்னிங் - Forward Collision Warning

டாடாவின் ரெட் டார்க் எடிசன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தில் ஃபார்வேர்டு கோலிஷன் வார்னிங் சிஸ்டம் இருக்கிறது. இதற்காக காருக்கு முன்பக்கம் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இது கார் பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் செல்லும் போது முன்பக்கம் வாகனம் ஏதாவது இடிக்கும்படி இருந்தால் இந்த சிஸ்டம் எச்சரிக்கையை வழங்கும். இதனால் விபத்தை தடுக்க முடியும்.

2. ரியர் கோலிஷன் வார்னிங்- Rear Collision Warning

எப்படி முன்பக்கம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதோ அதே போல பின்பக்கமும் சென்சார் பொருத்தப்பட்டு பின்பக்கம் வாகனம் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் மிக அருகில் இருந்தாலும் இந்த எச்சரிக்கை வழங்கப்படும். இது டிராஃபிக் மற்றும் பார்க்கிங் செய்யும் நேரங்களில் உதவும்

3. அட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் - Autonomous Emergency Breaking

கார் மெதுவாக வேகத்தில் செல்லும் போது முன்பக்க சென்சார் அருகே ஏதாவது பொருள் இருக்கிறது என எச்சரித்தும் கார் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தால் இந்த கார் தானாக பிரேக் பிடித்துக்கொள்ளும். இதனால் விபத்துக்களைத் தடுக்க முடியும். டிரைவர் கவனக்குறைவாக இருப்பது, அல்லது டிரைவிங்போது டிரைவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு பிரேக் பிடிக்காமலிருந்தால் அதனால் ஏற்படும் விபத்தை இது தடுக்கும்.

4. பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன்- Blind Spot Detection

இது நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது உதவும் காரில் வேகமாகப் பயணிக்கும் போது ஒரு லேனிலிருந்து வேறு ஒரு லேனிற்கு மாற முயற்சி செய்வோம். இப்படியாகக் காரை திருப்பும் போது கண்ணாடிகளில் பின்னாடி வரும் வாகனங்களைக் கண்காணிப்போம். ஆனால் காரில் பக்கவாட்டில் ஏதேனும் கார் வந்தால் அது கண்ணாடியில் தெரியாது. இப்படியான நேரங்களில் லேனை நாம் மாற்ற முயற்சிக்கும் போது வேறு ஏதாவது வாகனம் சென்று கொண்டிருந்தால் அதை சென்சார் மூலம் அறிந்து இந்த தொழிற்நுட்பம் எச்சரிக்கும். இதன் மூலம் பெரும் விபத்தைத் தடுக்க முடியும்.

5. டோர் திறந்திருக்கும் அலர்ட் - Door Open Alert

இந்த தொழிற்நுட்பத்தின் படி காரை நாம் சாலையின் ஓரம் பார்க் செய்திருக்கும் போது காரின் உள்ள அமர்ந்திருக்கும் நபர்கள் பின்பக்கம் வரும் காரை கவனிக்காமல் டோரை திறக்க முயற்சி செய்வார்கள். இப்படிச் செய்தால் அதை உடனடியாக கண்காணித்து டிரைவருக்கு எச்சரிக்கையைக் கொடுக்கும் கார் பார்க்கிங் மோட்டிற்கு வந்த பிறகே காரின் கதவுகளைத் திறக்க வேண்டும்.

6. ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் - Read Cross Traffic Alert

காரை நாம் ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்யும் போது காரின் பின்பக்க கேமராவை பார்த்து பின்னால் ஏதேனும் தடை இருக்கிறதா வேறு வாகனம் இருக்கிறதா எனப் பார்ப்போம். ஆனால் இந்த கேமராவில் காருக்கு நேரடியாக பின்னால் இருக்கும் விஷயம் தான் தெரியும். ஆனால் பின்பக்கம் உள்ள சென்சாரும் அதே நேரத்தில் வேலை செய்து அதிகமான நெருக்கத்தில் ஏதேனும் தடை வந்தால் உடனடியாக டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும்.

7. லேன் டிப்ராச்சர் அலர்ட் - Lane Departure Alert

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது சாலையில் லேன் மார்க்கிங் சரியாக இருந்தால் கார் லேனை விட்டு சற்று விலகிச் சென்றால் அதை உடனடியாக கண்டறிந்து லேன் சேஞ்ச் அலர்ட் சிஸ்டம் டிரைவரை எச்சரிக்கும். இது இரவு நேரப் பயணங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

8. ஹைபீம் அசிஸ்ட்- High Beam Assist

கார்களில் இரவு நேரத்தில் பயணிக்கும் பலர் மறந்து போகும் விஷயம் ஹை மற்றும் லோ பீம் என ஹெட்லைட் மாற்றுவது. பலர் ஹைபீமில் எதிரில் வரும் வாகன ஒட்டிகளின் கண்கள் கூசும் வகையில் ஹைபீமிலேயே செல்வார்கள். ஆனால் இந்த ஹைபீம் அசிஸ்ட் சிஸ்டம் எதிரில் வாகனம் வந்தால் ஹைபீமில் இருப்பதை லோ பீமாக தானாக மாற்றிவிடும். எதிரில் வரும் கார் கடந்து சென்றதும் மீண்டும் ஹைபீமிற்கு மாற்றிவிடும். டிரைவர் இதில் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. இது ஒரு ஆட்டோமெட்டிக் முறை

9. டிராஃபிக் சிக்னல் ரெககனேஷன் - Traffic Signal Recognition

இந்த டிராஃபிக் சிக்னல் கண்காணிப்பு சிஸ்டம் சாலையில் கார்கள் செல்லும் போது போக்குவரத்து சிக்னல்கள், ஸ்பீடு லிமிட் வேகத்தடை உள்ளிட்ட பல சிக்னல்களை கேமரா மூலம் பதிவானதும் அதைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து டிரைவரை அலர்ட் செய்யும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாகச் சென்றால் டிரைவரை எச்சரிப்பது, சிவப்ப விளக்கு எரியும் போது அதைக் கடந்து செல்ல முயற்சிப்பது உள்ளிட்டவை இதில் பொருந்தும்.

10. லேன் சேஞ்ச் அலர்ட் - Lane Change Alert

லேன் சேஞ்ச் அலர்ட் என்பது கிட்டத்தட்ட லேன் டிப்பார்ச்சர் அலர்ட் போலத் தான் ஆனால் இதில் ஒரு மாற்றம் இருக்கிறது. இது லேனை விட்டு கார் விலகியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது இது எச்சரிக்கை செய்யும் உதாரணமாக நீங்கள் செல்லும் காரில் முன்பக்கம் வேறு வாகனம் சென்று கொண்டிருந்தால் நீங்கள் அந்த வாகனத்தை விட வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த சிஸ்டம் உங்கள் லேனை மாற்ற எச்சரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 23, 2023, 16:00 [IST]
English summary
Top 10 things in tata new adas features in safari and harrier cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+