7 பேர் போலாம்! 26 கிமீ மைலேஜை வாரி வழங்கும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! அப்படியே வண்டிய ஷோரூமுக்கு விடு!

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதிகம் பேர் தாராளமாக பயணம் செய்ய முடியும் என்பதுதான் இதற்கு காரணம். இந்த சூழலில், இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகமாக விற்பனையான டாப்-5, 7 சீட்டர் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 13,818 ஆக இருந்த மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,857 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும்.

Maruti Suzuki Ertiga

சிறிய அளவிலான வீழ்ச்சி என்றாலும் கூட, வரும் மாதங்களில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இன்னும் 67 ஆயிரம் பேருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா கார்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

எனவே மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை வரும் மாதங்களில் மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். குறைவான விலை (Price) மற்றும் அதிக மைலேஜ் (Mileage) ஆகியவைதான், மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு கிடைத்து வரும் மிக பிரம்மாண்டமான வரவேற்பிற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

Mahindra Scorpio N

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை வெறும் 8.64 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மறுபக்கம் மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி எர்டிகா காரை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார், 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 6,455 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,185 ஆக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த பட்டியலில் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 7,984 ஆக இருந்த மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 9,333 ஆக உயர்ந்துள்ளது. இது 17 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 5,701 ஆக இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 7,221 ஆக உயர்ந்துள்ளது. இது 27 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில், 5வது மற்றும் கடைசி இடம், டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 2,025 ஆக இருந்த டொயோட்டா இன்னோவா காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 6,910 ஆக உயர்ந்துள்ளது. இது 241 சதவீத வளர்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு தலா ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் 3 இடங்களை தன்வசப்படுத்தி, இந்தியாவின் 7 சீட்டர் கார் மார்க்கெட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 18:40 [IST]
English summary
Top 5 7 seater cars in november 2023 maruti suzuki ertiga leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+