மாருதிய அடிக்கறதுக்குலாம் ஒருத்தன் புதுசா பொறந்துதான் வரணும்! டாடா, ஹூண்டாய்லாம் இத நெனச்சு கூட பாக்க முடியாது
இந்தியாவில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 கார் நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி: 1,34,158 கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம், நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 1.3 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஸ்விஃப்ட் (Swift), வேகன் ஆர் (Wagon R), எர்டிகா (Ertiga), பிரெஸ்ஸா (Brezza) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) போன்ற கார்கள்தான், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.
ஹூண்டாய் (Hyundai): 49,451 கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 3 சதவீத வளர்ச்சி ஆகும். க்ரெட்டா (Creta), வெனியூ (Venue) மற்றும் எக்ஸ்டர் (Exter) போன்ற கார்கள்தான் இதற்கு முக்கியமான காரணம்.

டாடா (Tata): 46,070 கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்பபோது, இது 0.1 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிகவும் சிறிய அளவிலான வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா (Mahindra): மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 39,981 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 31.6 சதவீத வளர்ச்சி ஆகும்.
கியா (Kia): இந்த பட்டியலில் கியா நிறுவனம் 5வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 22,762 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.3 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் வரும் மாதங்களில் இந்த சரிவில் இருந்து கியா மீண்டு எழும் என நம்பப்படுகிறது.
கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift) வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதுதான் இதற்கு காரணம். இதுதவிர புதிய தலைமுறை கார்னிவல் (New-gen Kia Carnival) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் கியா நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் கியா தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் விற்பனையில் சிறிய அளவிலான வளர்ச்சியையாவது பதிவு செய்துள்ளன. எனினும் கியா நிறுவனமும் கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








