பழச புதுசாக்கும் அதிசய திறன் கொண்ட பொருட்கள்... 80ஸ், 90ஸ் கார்களைகூட அட்வான்ஸ்டு வாகனமா மாத்திடலாம்..
உங்களிடம் பழைய இப்பவும் நல்ல ஓடும் திறனில் இருக்கின்றதா?, அதை நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால ஓட்டாம வச்சிருக்கீங்களா?, எப்பேர்பட்ட பழைய காராக இருந்தாலும் அதை நம்மால் தற்போது விற்பனையில் இருக்கும் நவீனயுக கார்களைபோல் புதுசாக்கிவிட முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இதுபற்றிய விரிவான தகவலைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ கொண்ட ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்: இன்றை நவீன கால கார்களில் காணப்படும் மிக முக்கியமான டெக்னாலஜியாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காட்சியளிக்கின்றது. இந்த அம்சத்தை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலைக் கொண்ட கார்களில் மட்டுமே கடந்த காலங்களில் விற்பனைக்கு வழங்கி வந்தது.

ஆனால், இப்போது அது குறைந்த விலை கார்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், பழைய கார் பயன்பாட்டாளர்களும் இந்த அம்சத்தை உபயோகித்துக் கொள்ளும் விதமாக சில டீலர்கள் மற்றும் கார்களுக்கான அக்ஸசரீஸ்களை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அம்சத்தின் வாயிலாக உங்கள் ஸ்மார்ட்போனை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி, ஜிபிஎஸ் மற்றும் மேப் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர இன்னும் வசதிகளையும் இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டையர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம்: ஓர் கார் மிக சிறப்பாக இயங்க வேண்டும் என்றால், அதன் எஞ்ஜின் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதேபோல், அந்த காரின் டயர்களில் போதி அளவு காற்று இருக்க வேண்டும். போதிய அளவு காற்று இருந்தால் மட்டுமே அந்த டயருக்கு நல்ல பிடமான சாலையில் கிடைக்கும்.

மிக சிறந்த கிரிப்னஸ் கிடைக்கும், காரின் சூப்பர் திறன் வெளிப்பாட்டை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், காரின் டயர்களில் போதி அளவு காற்று இருக்கின்றதா என்பதை கண்ணோட்டம் செய்வது மிகுந்த அவசியமானதாக இருக்கின்றது. இந்த பணியை நமக்காக டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் செய்துவிடும். டயரில் போதிய அளவு காற்று இல்லை எனில் அதுகுறித்த எச்சரிக்கையை நமக்கு வழங்கும்.

ஒயர்லெஸ் சார்ஜர்: ஒயர்லெஸ் சார்ஜர்கள் உங்களது கேட்ஜெட்களை வேகமாகவும், ஒயர் இல்லாமலும் சார்ஜ் செய்து கொள்ள உதவியாக இருக்கும். சில நேரங்களில் ஒயர் இல்லாத காரணத்தினால் கார் பயணங்களின் போது செல்போனை சார்ஜ் செய்வது கடினமாகிவிடுகின்றது. இந்த மாதிரியான சூழலில் இந்த ஒயர்லெஸ் சார்ஜர் இருப்பினும் எந்த தடையும் இல்லாமல் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

ஹெட்ஸ்-அப் திரை: சாலையில் இருந்து கவனத்தை சிதற விடாமல் வைத்து கொள்ள இந்த ஹெட்ஸ்-அப் திரை உதவியாக இருக்கும். இந்த திரை விண்ட் ஷீல்டிலேயே நமக்கு தேவையான தகவலை வழங்கும். வாகனத்தின் வேகம், நேவிகேஷன் மற்றும் பிற முக்கிய தகவல்களையும் அது வழங்கும்.
சென்சாருடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா: மேலே பார்த்த அக்ஸசரீஸ்களை போலவே ரிவர்ஸ் பார்க்கி கேமிராவும், சென்சார்கள் வசதியுடன் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதை உங்கள் பழைய காரில் பொருத்தும்பட்சத்தில் மிக சுலபமாக காரை ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் செய்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்களை உங்களுடைய மிக பழைய கார்களில்கூட பொருத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றை அந்த கார்களில் இன்ஸ்டால் செய்யும்பட்சத்தில் அந்த ஓல்டு கார் நவீன கால கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாறிவிடும். அதேவேளையில், பிரீமியம் உணர்வை அவை நமக்கு வழங்கும்.


Click it and Unblock the Notifications
