இந்த 2 மாருதி காரும் வந்துச்சுனா எல்லா நிறுவனங்களும் காலி! வேற தொழில் பண்ணிதான் பொழப்பு நடத்திக்கணும்!

இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 கார்களின் (Top-5 Cars) பட்டியல் நமக்கு கிடைத்துள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) முதலிடத்தை பிடித்துள்ளது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற கார்களை எதிர்த்து, மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 12,570 பலேனோ கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 18,592 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 48 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த 2 மாருதி காரும் வந்துச்சுனா எல்லா நிறுவனங்களும் காலி! வேற தொழில் பண்ணிதான் பொழப்பு நடத்திக்கணும்!

இது உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்தே இருக்க முடியாது. மாருதி சுஸுகி பலேனோ காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷன், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவும் கூட பலேனோ காரின் இந்த சாதனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) 2வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்விஃப்ட் கார் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் கூட விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,202 ஆக இருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 18,412 ஆக குறைந்துள்ளது. இது 4 சதவீத சரிவாகும்.

இந்த 2 மாருதி காரும் வந்துச்சுனா எல்லா நிறுவனங்களும் காலி! வேற தொழில் பண்ணிதான் பொழப்பு நடத்திக்கணும்!

ஆனால் ஸ்விஃப்ட் காரின் விற்பனையை உயர்த்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் அதிரடியான திட்டம் ஒன்றை கையில் வைத்துள்ளது. ஆம், ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மாடலில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின், ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை வழங்கலாம் என வெளியாகியுள்ள தகவல், வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. எனவே புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto), 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,551 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 18,114 ஆக உயர்ந்துள்ளது. இது 57 சதவீத வளர்ச்சியாகும். இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஆல்டோ காரை, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்ததுதான், இந்த வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14,669 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 16,889 ஆக உயர்ந்துள்ளது.

இது 15 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,438 ஆக இருந்த மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 16,798 ஆக குறைந்துள்ளது. இது 4 சதவீத வீழ்ச்சியாகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை போலவே, மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு தயாராகி வருகிறது. இதிலும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என கூறப்படுவதால், ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் உள்ள 5 கார்களுமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். டாப்-5 பட்டியலில் வேறு எந்தவொரு நிறுவனத்தின் காருக்கும் இடமில்லை. இதன் மூலம் இந்திய சந்தையின் தனிக்காட்டு ராஜா என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழுத்தம், திருத்தமாக நிரூபித்து காட்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2023, 11:25 [IST]
English summary
Top 5 cars february 2023 maruti suzuki baleno swift alto wagon r dzire
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+