வாங்குன விலைக்கே விக்கலாம்! அதிக ரீசேல் வேல்யூ உள்ள கார் இது தான், லிஸ்டை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க!

புதிதாக கார் வாங்க போகிறோம் என்றால் அதில் பல்வேறு விஷயங்களை யோசித்து தான் முடிவு செய்வோம். அதன் டிசைன் மைலேஜ் அதில் உள்ள அம்சங்கள் நாம் கொடுக்கும் காசுக்கு வொர்த்தாக இருக்கிறதா அதில் எல்லா வசதிகளும் இருக்கிறதா வாகனம் ஓட்ட வசதியாக இருக்கிறதா என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்வோம். அதில் ஒரு விஷயம் தான் வாகனத்தின் ரீசேல் வேல்யூ.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிதாக ஒரு காரை வாங்கும் போது அந்த காரை திரும்ப விற்கும் போது என்ன விலைக்கு விற்பனையாகும் என்ன மதிப்பீடு செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த காரை விற்பனை செய்துவிட்டு வேறு புதிய காரை வாங்கலாம் என்ற ஐடியாவில் இருப்பார்கள். இதனால் இந்த ரீவேல்யூ என்பது இந்தியாவில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

top 5 resale value cars

இப்படியாக இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் கார்கள் புதிதாக வாங்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்யப்பட்டால் நல்ல விலையில் விற்பனையாகும் கார்களின் பட்டியல் இந்தியாவில் மிக நீளமாகவே இருக்கிறது. பல கார்கள் இந்தியாவில் ரீசேல் செய்யப்படும் போது நல்ல மதிப்பில் விற்பனையாகிறது. அதில் டாப் 5 கார்களின் பட்டியலை இங்கே காணலாம்.

ஹோண்டா சிட்டி: இந்தியாவில் உள்ள பிரபலமான கார் இது காராக இருக்கும். இந்த கார் ரீசேலில் நல்ல மதிப்பை பெரும் காராக இருக்கிறது. தற்போது இந்த கார் மார்க்கெட்டில் ரூ 11.63 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் நல்ல பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் வருகிறது.

top 5 resale value cars

மஹிந்திரா ஸ்கார்பியோ: நீண்ட ஆண்டுகளாக செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இதன் பாக்ஸ் டிசைன் மற்றும் லுக் ஆகியன இந்த காருக்கு நல்ல மதிப்பை கொடுக்கிறது. அரசியல்வாதிகள் பலர் இந்த காரை வாங்க காத்திருக்கிறார்கள். சமூகத்தில் நல்ல மதிப்பை கொடுக்கும் என்பதால் இந்த காருக்கு மார்க்கெட்டில் எப்பொழுதும் நல்ல டிமாண்ட் இருக்கிறது.

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: இந்தியாவில் கொடுக்கும் காசுக்கு நல்ல மதிப்பான கார் என்றால் இந்த காரை சொல்லலாம். இந்த காரின் டிசைன் மற்றும் மக்கள் மத்தியில் இந்த காருக்கு இருக்கும் ஈர்ப்பு ஆகியவை இந்த கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் நல்ல விலையில் விற்க உதவுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மக்களை ஈர்க்கிறது. தனிநபர் பயன்பாட்டுக்காக இந்த கார் அதிகம் விரும்பப்படுகிறது.

top 5 resale value cars

மாருதி சுஸூகி டிசையர்: இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் செடான் கார்களிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் கார் இதுதான். இதுஸ்விஃப்டை தழுவி உருவாக்கப்பட்ட கார் என்பதால் இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக அந்த கார் விற்பனையாகி வருவதால் இந்த காரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் வாங்க ஏகப்பட்ட நபர்கள் காத்திருக்கிறார்கள்.

டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா: டொயோட்டா நிறுவனம் வெளியிட்ட இந்த கிரைஸ்டா கார் யூட்டிலிட்டி ரக வாகன மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் மதிப்பை பெற்ற காராக இருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் இன்னோவா கிரிஸ்டா மற்றும் இனோவா ஹைகிராஸ் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. முக்கியமாக இந்த கார்கள் டிராவல்ஸ் நிறுவனங்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இதன் டிசைன், வசதிகள், பவரான இன்ஜின் ஆகிய இந்த காருக்கு மறு மதிப்பீட்டைக் கூட்டுகிறது.

பட்டியலில் உள்ள இந்த கார்கள் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையாகி வரும் கார்கள். இந்த கார்களை இன்று நீங்கள் வாங்கினால் இன்னும் சில ஆண்டுகள் நீங்கள் பயன்படுத்தும் போது இந்த காரின் விலை அதிகமாக கூடும். இதனால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த காரை நீங்கள் விற்கும் போது இந்த காரை நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்களோ அந்த பணத்திற்கே கூட விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை மறு விற்பனை செய்யப்படும் போது நல்ல விலை கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் காரை பயன்படுத்தும் போது முறையாக பராமரிக்க வேண்டும். சிறப்பான பராமரிப்பில் இருக்கும் காருக்கு தான் செகண்ட் ஹாண்ட் மார்க்கெட்டில் நல்ல பணம் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த காரில் உங்களுக்கு பிடித்த கார் எது என கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 7:00 [IST]
English summary
Top 5 cars with the best resale value in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X