கால வச்சு லேசா அழுத்தினாலே போதும் 100கிமீ வேகத்த தொட்டுவிடும்! டாப்5 உலகின் அதிவேக கார்களின் பட்டியல்!
அதிக வேகத்தில் சீறி பாயும் கார்கள் ரேஸ் டிராக்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த காலம் எல்லம் தற்போது மாறிவிட்டது. மின்னல் வேகத்தில் சீறி பாயும் கார்களைகூட ஒரு சில நாடுகள் சாலை பயன்பாட்டிற்கு அனுமதித்து வருகின்றன. ஆகையால், இந்த வகை கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த தேவையை பூர்த்தி செய்ய வாகன உற்பத்தியாளர்கள் மின்னல் வேகத்தில் சீறி பாயக் கூடிய கார்களை போட்டி போட்டுக் கொண்டு களமிறக்கி வருகின்றனர். அந்தவகையில், தற்போது உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக அதிக வேகத்தில் பயணிக்கும் சூப்பர் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

மிக முக்கியமான டாப் ஐந்து அதி வேகத்தில் செல்லும் கார்களின் லிஸ்டையே வழங்கி உள்ளோம். இவை அனைத்தும் ஒரு சில செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை ஆகும். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
புகாட்டி சிரோன் பர் ஸ்போர்ட் (Bugatti Chiron Pur Sport): ஐந்தாவது இடத்தை இந்த காரே பிடித்திருக்கின்றது. இந்த சூப்பர் வெறும் 2.3வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 350கிமீ ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக இந்த காரில் 8.0லிட்டர் குவாட்-டர்போசார்ஜட் டபிள்யூ-16 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 1,480எச்பி வரை வெளியேற்றும்.
போர்ஷே 918 ஸ்பைடர் (Porsche 918 Spyder): நான்காவது இடத்தில் இருக்கின்றது இந்த உலக புகழ்பெற்ற போர்ஷேவின் தயாரிப்பு. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 வேகத்தை எட்டுவதற்கு இந்த காருக்கு வெறும் 2.2 வினாடிகளே போதுமானதாக இருக்கின்றது. அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 345 கிமீட்டராக உள்ளது. இந்த காரில் 652 kW பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
லூசிட் ஏர் சஃபையர் (Lucid Air Sapphire): மற்ற சூப்பர் கார்களை போல அல்ல இது. இது ஓர் தனித்துவமான சூப்பர் காராகும். மின்சாரத்தில் இந்த கார் இயங்குகின்றது. இந்த கார் வெறும் 1.89 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 வேகத்தை எட்டி விடும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 329 கிமீ ஆகும். இதுவே உலகின் முதல் முழு எலெக்ட்ரிக் லக்சூரி சூப்பர் ஸ்போர்ட்ஸ் செடான் வகை கார் மாடலும் ஆகும். இந்த சூப்பர் திறன் காரணமாகவே இந்த கார் நம்முடைய இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.
பினின்ஃபரினா பட்டிஸ்டா (Pininfarina Battista): இதுவும் மின்சார சூப்பர் காராகும். இந்த கார் 1.79 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 358 கிமீ ஆகும். இந்த வேகத்தை வெறும் 10.49 செகண்டுகளுக்கு உள்ளாகவே இந்த காரை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரைமக் நெவேரா (Rimac Nevera): உலகின் மிக அதிக வேகத்தில் சீறி பாயும் கார்களின் லிஸ்டில் முதல் இடத்தை இந்த காரே பிடித்திருக்கின்றது. இந்த சூப்பர் கார் வெறும் 1.74 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இது எலெக்ட்ரிக் ஹைப்பர் காராகும். இந்த கார் 2,000 குதிரை திறனை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார்கள் மட்டுமில்லைங்க, மெக்லாரன் பி1 (McLaren P1), மெகலாரன் 750எஸ் (McLaren 750S), செவ்ரோலட் கோர்வெட்டே இசட்06 (Chevrolet Corvette Z06), கோனிக்செக் ஜெஸ்கோ (Koenigsegg Jesko), பெர்ராரி எஸ்எஃப்90 ஸ்ட்ரேடேல் (Ferrari SF90 Stradale) ஆகிய கார் மாடல்களும் உலகின் அதிக வேகத்தில் பயணிக்கும் கார் மாடல்களாக இருக்கின்றன.
இதுதவிர, டாட்ஜ் சேலஞ்ஜர் எஸ்ஆர்டி டெமோன் 170 (Dodge Challenger SRT Demon 170), மெர்சிடிஸ் ஏஎம்ஜி (Mercedes AMG) மற்றும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட் (Tesla Model S Plaid) ஆகிய கார் மடால்களும் உலகின் அதிக வேகத்தில் இயங்கும் கார் மாடல்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








